கோவையில் இருந்து அயோத்தி ராமர் கோவில் வரை இருசக்கர வாகனத்தில் செல்ல காவல்துறை அனுமதி மறுப்பு

கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்லவும், இஸ்லாமியர்கள் மெக்கா செல்லவும் அனுமதி கொடுக்கும் அரசு ஏன் அயோத்தி ராமர் கோவில் செல்ல அனுமதி கொடுப்பதில்லை என கோவை பாஜக விருந்தோம்பல் குழுவின் மாவட்ட துணைத் தலைவர் இந்துஜா காஞ்சி கேள்வி எழுப்பினார்.


கோவை: அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் வருகிற 22 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்காக கோவை பாஜக விருந்தோம்பல் குழுவின் மாவட்ட துணைத் தலைவராக உள்ள இந்துஜா காஞ்சி என்பவர் இருசக்கர வாகனத்தில் கோவை ராம்நகர் பகுதியில் உள்ள ராமர் கோவில் இருந்து அயோத்தி ராமர் கோவில் வரை கிட்டத்தட்ட 2500 கிலோமீட்டர் பயணம் மேற்கொள்ள இருந்தார்.



இந்த நிலையில் கோவில் முன்பாக நின்று கொண்டிருந்த காவல்துறை இருசக்கர வாகனத்தில் செல்ல அனுமதி இல்லை என மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து இந்துஜா காஞ்சி கூறும் பொழுது கிறிஸ்தவர்கள் ஜெருசலேம் செல்லவும், இஸ்லாமியர்கள் மெக்கா செல்லவும் அனுமதி கொடுக்கும் அரசு ஏன் எங்களுக்கு கொடுப்பதில்லை என கேள்வி எழுப்பினார்.



இந்த பிரச்சனையில், சட்டப்படி நடவடிக்கை எடுப்போம் என அவர் தெரிவித்துள்ளார். அனுமதி கடிதம் கொடுத்தவுடன் பரிசீலனை செய்யப்படும் எனவும், பாதுகாப்பு கருதி இருசக்கர வாகனத்தில் செல்ல அனுமதி இல்லை என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...