தடாகம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

தடாகம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தலைமையில் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதில், சிறப்பு விருந்தினராக பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம் தனது மனைவியுடன் கலந்துக்கொண்டார்.


கோவை: கோவை தடாகம் காவல் நிலையத்தில் கொண்டாடப்பட்ட சமத்துவப் பொங்கல் விழாவில் பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளர் நமச்சிவாயம் உள்பட அனைத்து காவலர்களும் ஒரே மாதிரியான வேட்டி சட்டை அணிந்து பொங்கல் வைத்து மகிழ்ச்சியாக கொண்டாடினர்.

கோவை மாவட்ட காவல்துறைக்குட்பட்ட அனைத்து காவல் நிலையங்களிலும் பொங்கல் விழா வெகு விமர்ச்சியாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கணுவாய் அடுத்துள்ள தடாகம் காவல் நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

இதற்கு தடாகம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் ஜெயபிரகாஷ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி நமச்சிவாயம் தனது மனைவியுடன் கலந்துக்கொண்டார். காவல்நிலையத்திலுள்ள அனைத்து காவலர்களுக்கும் ஒரே மாதிரியான பாரம்பரிய வேட்டி – சட்டை அணிந்து பொங்கலை கொண்டாடினர்.

தொடர்ந்து ஊர்பொதுமக்களுடன் இணைந்து சர்க்கரை பொங்கல் வைக்கப்பட்டது. பொங்கல் பொங்கும்போது காவல்துறையினர் பொங்கலோ பொங்கல் என கோசமிட்டனர்.

பின்னர் இலையில் பொங்கல் படையிலிட்டு தேங்காய் உடைத்து சூரிய பகவானுக்கு நன்றி கூறி அனைவரும் சாமி கும்மிட்டனர். அனைவருக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது. தொடர்ந்து பெரியநாயக்கன்பாளையம் துணை காவல் கண்காணிப்பாளருடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்நிகழ்வில் காவலர்கள் ஆர்வமுடன் கரும்புகளை பல்லால் கடித்து சுவைத்து மகிழ்ந்தனர்.



இதில் எஸ்.ஐ. ஜீவன்ராஜ்துரை, எஸ்.ஐ.ஐயாசாமி, பெரியநாயக்கன்பாளையம் தனிபிரிவு எஸ்.ஐ ஐயப்பன், எஸ்.எஸ்.ஐ அந்தோனிசாமி, தலைமை காவலர்கள் முருகன், முருகேசன், தனிப்பிரிவு போலீஸ் செல்லக்கண்ணு, காவலர்கள் ஜனக்குமார், ராமராஜ், பாலமுருகன், நட்டார், தமிழரசன், குமரேசன், கார்த்திக் மற்றும் ஊர்பொதுமக்கள் திரளாக கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...