உழவுக்கு உதவிய கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் திருப்பூரில் கால்நடைகளுக்கு பொங்கல் வைத்து வழிபாடு

கால்நடைகளின் உரிமையாளர்கள் தங்களது குடும்பத்துடன் மாட்டுப்பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர். சிறப்பு வழிபாடு நடத்தி தங்களது கால்நடைகளுக்கு அவர்கள் மரியாதை செலுத்தினர்.


திருப்பூர்: தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான தைப்பொங்கலின் இரண்டாம் நாளான இன்று கால்நடைகளை போற்றும் வகையில் மாட்டுப்பொங்கல் கொண்டாடப்படுகிறது.



மாடு மற்றும் ஆடு வளர்ப்போர் அவற்றை சுத்தம் செய்து, கொம்புகளை சீவி, வர்ணம் பூசி, சலங்கை கட்டி அலங்கரித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்துவர்.



பொங்கல்தினத்தன்று பொங்கல் வைத்து சூரியனை வழிபட்டதைப் போல, இன்றும் பொங்கல் வைத்து கால்நடைகளை வழிபட்டு மாட்டுப்பொங்கலை கொண்டாடினர். திருப்பூர் விஜயாபுரம் பகுதியில் கால்நடைகளின் உரிமையாளர்கள் குடும்பத்துடன் மாட்டுப்பொங்கலை கொண்டாடினர். மாடுகளை வழிபட்டு தங்கள் கால்நடைகளுக்கு மரியாதை செலுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...