காங்கேயம் காவல் நிலையத்தில் பொங்கல் விழா கொண்டாட்டம் - பாரம்பரிய உடையில் வந்த காவலர்கள்

தைப்‌ பொங்கலை முன்னிட்டு காவல் ஆய்வாளர் காமராஜ் மற்றும் மகளிர் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர் தலைமையில் காவல் நிலையத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பாரம்பரிய உடையில் வந்து பொங்கல் வைத்து போலிசார் மகிழ்ந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம்-தாராபுரம் சாலையில் காங்கேயம் காவல் நிலையம் மற்றும் காங்கேயம் அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆகியவை இயங்கி வருகிறது. தைப்‌ பொங்கலை முன்னிட்டு காவல் ஆய்வாளர் காமராஜ் மற்றும் மகளிர் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி ஆகியோர் தலைமையில் காவல் நிலையத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.



மேலும் பொங்கல் விழா கொண்டாடுவதற்கு ஆண் காவலர்கள் சட்டை வேஷ்டியிலும், பெண் காவலர்கள் சேலை அணிந்தும் வந்திருந்தனர். இதில் இரண்டு காவல் நிலைய வளாகங்களிலும் வண்ண கோலமிட்டு பாரம்பரிய முறைப்படி அடுப்புக் கூட்டி, கரும்புகள் வைத்து மண் பானையில் பொங்கல் வைத்து அனைத்து போலிசாரும் இணைந்து பொங்கல் விழாவை உற்சாகமாகவும், மிகச் சிறப்பாகவும் கொண்டாடினர்.

மேலும் உதவி காவல் ஆய்வாளர்கள் சந்திரன், கார்த்திக், கோமதி, மாலா, பாஸ்கர், சத்தியமூர்த்தி மற்றும் காங்கேயம் காவல் நிலைய போலிசார்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...