சயின்ஸ் பிக்சன் மாதிரியான படங்கள் இயக்குவதில் மகிழ்ச்சி - திருப்பூரில் அயலன் திரைப்பட இயக்குனர் ரவிக்குமார் பேட்டி

சக்தி திரையங்கிற்கு வருகை தந்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து, அயலன் படம் குறித்த கருத்துகளை திரைப்பட இயக்குனர் ரவிக்குமார் கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து ரசிகர்களுடனும், பொதுமக்களுடனும் அவர் செல்பி எடுத்துக் கொண்டார்.


கோவை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், ரவிக்குமார் இயக்கத்தில் பொங்கல் பண்டிகைக்கு சயின்ஸ் பிக்சன் படமான அயலான் திரைப்படம் வெளியாகி உள்ளது. இந்த திரைப்படம் வெளியாகி உள்ள திரையரங்குகளில் மக்களின் எதிர்பார்ப்பு, கருத்துகளை அறிந்து கொள்ள அயலான் திரைப்படத்தின் இயக்குனர் ரவிக்குமார் திருப்பூரில் உள்ள சக்தி திரையங்கிற்கு இன்று வருகை தந்து ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து, படம் குறித்த கருத்துகளை கேட்டறிந்தார்.



தொடர்ந்து ரசிகர்களுடனும், பொதுமக்களுடனும் செல்பி எடுத்துக் கொண்டார்.



இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ரவிக்குமார், எனது இயக்கத்தில் வெளிவந்துள்ள அயலான் படத்தின் கருத்துக்களை கேட்பதற்காக இன்று எனது சொந்த ஊரான திருப்பூரில் உள்ள ஸ்ரீ சக்தி திரையரங்கிற்கு வந்துள்ளேன். இங்கு மக்கள் அளித்த வரவேற்பு உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. அயலான் படம் நன்றாக இருப்பதாகவும், புதுவிதமான உணர்வை தூண்டி இருப்பதாகவும், தங்களது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்து இருப்பதாகவும் ரசிகர்கள் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

அயலான் படம் திரைக்கு வருவதற்கு பல்வேறு கட்ட போராட்டங்களை சந்தித்து ஆறு ஆண்டுகள் கழித்து திரைக்கு வந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்காக உழைத்த அனைவருக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். படம் குறித்து பல்வேறு விதமான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.

என்னைப் பொறுத்தவரை விமர்சனங்களை ஏற்றுக் கொண்டு எது சரியில்லையோ அதனை அடுத்த படத்தில் திருத்திக்கொள்ள முயற்சி செய்வேன். தமிழ் திரையுலகில் சயின்ஸ் பிக்சன் மாதிரியான படங்களை இயக்குவது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனது வரும் அடுத்த படைப்புகளிலும், சயின்ஸ் பிக்சன் தொடர்பான புதிய முயற்சிகளை படமாக இயக்க திட்டமிட்டுள்ளேன்.

வரும் காலங்களில் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும். சிவகார்த்திகேயன் உடன் மட்டுமின்றி அனைத்து முன்னணி நடிகர்களுடனும் இணைந்து பணியாற்ற விருப்பம் உள்ளது. வரும் காலங்களில் அது நிறைவேறும் என நினைக்கிறேன் என்றார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...