உலகிலேயே முதல் முறையாக கோவையில் முற்றிலும் தமிழ் எழுத்துக்களால் உருவான பிரம்மாண்ட திருவள்ளுவர் சிலை

திருவள்ளுவர் சிலை தமிழ் எழுத்துக்களால் உருவாக்கபட்டுள்ளது இதுவே முறை. 20 அடி உயரம், 18 அகலம், 19.5 அடி நீளம் கொண்டது. முற்றிலும் இரும்பினால் ஆன தமிழ் எழுத்துக்களால் ஆன இந்த சிலையில் திருவள்ளுவர் “அறம்” என்ற வார்த்தையை தனது தலை நெற்றியில் பொறிக்கப்பட்டுள்ளதாக இந்த சிலையை உருவாக்கிய திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.


கோவை: "வள்ளுவன் தன்னை உலகிற்கே தந்து வான் புகழ் கொண்ட தமிழ்நாடு" என்ற மகாகவி பாரதியின் புகழ் வரிகளுக்கேற்ப வான் புகழ் கொண்டது கோவை மாநகராட்சி. அதற்கும் காரணம் திருவள்ளுவர் சிலை தான். நாடு முழுவதும் பல நகரங்கள் சீர்மிகு நகரம் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கபட்டு பணிகள் மூலம் பொலிவூட்டபட்டது.



அதில் குறிப்பாக கோவை மாநகரின் குறிச்சி குளக்கரை சீர்மிகு திட்ட பணிகளால் பொலிவூட்டபட்டு செம்மொழியாம் அன்னை தமிழில், திருவள்ளுவனுக்கு சிலை அமைக்கபட்டுள்ளது.



முற்றிலும் தமிழ் எழுத்துக்களால் உருவாக்கபட்ட பிரம்மாண்ட திருவள்ளுவர் சிலை. தமிழ் எழுத்துக்கள் மட்டுமல்லாது பல்வேறு சிறப்புடைய இந்த திருவள்ளுவர் சிலையை உருவாக்கியவர் கோவையை சேர்ந்த திருமூர்த்தி. இவர், எம்.ஜி.கைனட்டிக் ஆர்ட் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இரும்பினை கொண்டு வடிவமைத்து பல்வேறு பொருட்களை உருவாக்கியுள்ளார்.

அதிலும் குறிப்பாக கிராவிட்டியை (புவியீர்ப்பு விசையை) பயன்படுத்தி இயங்கும் உருளும் பந்துகள் தயாரிப்பதில் தனி சிறப்பு பெற்றவர். தமிழ் மற்றும் திருவள்ளுவர் மீது கொண்ட தீரா பற்றால் தமிழ் எழுத்துக்களால் திருவள்ளுவர் சிலையை கோவை மாநகராட்சிக்கு என பிரத்தியேகமாக வடிவமைத்து கொடுத்துள்ளார்.



இந்த பிரம்மாண்ட சிலை குறித்து கூறும் திருமூர்த்தி, ஓலை சுவடிகளில், களி மண்ணால், மரத்தால் உருவாக்கபட்ட திருவள்ளுவர் சிலையை நாம் பார்த்திருப்போம் ஆனால் இந்த திருவள்ளுவர் சிலையோ தமிழ் எழுத்துக்களால் உருவாக்கபட்டுள்ளது இதுவே முறை. 20 அடி உயரம், 18 அகலம், 19.5 அடி நீளம் கொண்டது. முற்றிலும் இரும்பினால் ஆன தமிழ் எழுத்துக்களால் ஆன இந்த சிலையில் திருவள்ளுவர் “அறம்” என்ற வார்த்தையை தனது தலை நெற்றியில் கொண்டுள்ளார். அதற்கு காரணம் ஒரு தலைவன், ஒரு குழு தலைவன், ஒரு ஆட்சியாளன் என்பவன் நல்லாட்சி புரிய விருப்பு, வெறுப்பில்லாது அறத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதை நெற்றி பொட்டில் எடுத்துரைக்கும் விதமாக வும், இரு கண்களில் ஐ என்ற எழுத்துகள் கண்விழியாகவும் பொறிக்கபட்டுள்ளதாகவும், தமிழ் எழுத்துக்கள் தோன்றிய ஆதிகாலத்தில் தமிழ் என்ற வார்த்தை தமிழ் எழுத்துக்களால் மட்டுமல்ல வட்ட எழுத்துக்களால் எப்படி எழுதபட்டதோ அதேபோன்று தமிழ் என்ற வார்த்தையை திருவள்ளுவர் சிலையின் மார்பில் பொறித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சிலையின் வளைவுகளுக்கு ஏற்ப ஒவ்வொரு தமிழ் எழுத்துக்களின் அளவுகளை அளந்து இந்த சிலை உருவாக்கபட்டுள்ளதாக தெரிவித்தவர், மனிதனுக்கு எப்படி முதுகெலும்பு வலுவை கொடுக்கிறதோ அது போல் இந்த திருவள்ளுவரின் முதுகு பாகத்தில் பெரிய தடிமனான எழுத்துகளை வைத்துள்ளதாக தெரிவித்தார்.

24 பாகங்களாக உருவாக்கபட்ட இந்த சிலையை மற்ற இடங்களுக்கு எடுத்து சென்று 24 பாகங்களையும் ஒன்றினைத்து இந்த சிலையை இடமாற்றம் செய்ய முடியும் என்றார். ஈரடியில் திருக்குறளை தந்த வள்ளுவனுக்கு 3 டன் எடையில் சிலை என்ற சிறப்பை பெற்றுள்ளது இந்த திருவள்ளுவர் சிலை. முப்பால் அதிகாரங்களை கொண்டு ஈரடியில் உலகினை அளந்த திருவள்ளுவனின் தினத்தில் அவரை போற்றுவோம், கொண்டாடுவோம் சிலையாக அல்ல தமிழாக என்று அவர் கூறினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...