பொள்ளாச்சி அருகே உள்ள மணக்கடவு வாணவராயர் வேளாண்மை கல்லூரியில் மூன்று நாட்களாக பொங்கல் விழா கொண்டாட்டம்

பொங்கல் விழாவில், ஏறு தழுவுதல், முறுக்கு கடித்தல், அம்மி அரைத்தல், உலக்கை குத்துதல், கரும்பு கடித்தல், பூமாலை கோர்த்தல், ரங்கோலி வண்ணக் கோலங்கள் இடுதல் மற்றும் களிமண் சிற்பம் செய்தல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள மணக்கடவு வாணவராயர் வேளாண்மை கல்லூரியில் கடந்த மூன்று நாட்களாக தமிழர் திருநாளாம் பொங்கல் பெரு விழா நடைபெற்றது.

பொங்கல் சிறப்பு விழாவில் முதலாம் நாளில் (11.01.2024) கிராமப்புற சமையல் மற்றும் விளையாட்டு போட்டியான கபடி போட்டி நடைபெற்றது.



இரண்டாம் நாள் அன்று (12.01.2024) ஏறு தழுவுதல், முறுக்கு கடித்தல், அம்மி அரைத்தல், உலக்கை குத்துதல், கரும்பு கடித்தல், பூமாலை கோர்த்தல், ரங்கோலி வண்ணக் கோலங்கள் இடுதல் மற்றும் களிமண் சிற்பம் செய்தல் ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

பிற்பகலில் மேலும் இவ்விழாவை சிறப்பிக்குமாறு சிறப்பு விருந்தினராக முனைவர் பி.பாலசுப்ரமணியம், இயக்குனர், இயற்கை வள மேலாண்மை இயக்குனரகம் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை மற்றும் சிறப்பு பேச்சாளராக முனைவர் சொ.சேதுபதி, இனைபேராசிரியர் பாரதிதாசன், அரசினர் மகளிர் கல்லூரி, புதுச்சேரி இவ்விழாவில் பங்கேற்றனர். இதனை தொடர்ந்து வரலாற்று சிறப்புமிக்க நாடகங்களிலும், பாரம்பரிய நடனங்களிலும் மாணவ,மாணவியர் பங்கேற்றனர்.

அதனைத்தொடர்ந்து, "கடவுள்களின் வேடம்" அணிந்து நடனமாடிய மாணவ மாணவிரை பார்த்து பார்வையாளர்கள் வியப்படைந்தனர்.மாலையில் நடந்து முடிந்த பட்டி பொங்கல், மற்றும் முளைப்பாரி எடுத்தல், ரேக்ளா கண்காட்சி, சேவல் கண்காட்சி, கும்மி, மாரியம்மன் நடனம் ஆகிய நிகழ்வுகளில் மாணவ மாணவியர் பங்கேற்றனர்.



இரவு வெளியிலிருந்து அழைத்து வரப்பட்ட பாரம்பரிய கலை குழுவினர்களின் வள்ளி கும்மியாட்டம் மற்றும் திரன்கலை கலைக் குழுவின் கம்பத்து நடனம் நடைப்பெற்றது.



பொங்கல் கொண்டாட்டத்தின் மூன்றாம் நாள் (13.01.2024)அன்று பொங்கல் வைத்தல், தேங்காய் சுடுதல், கயிறு இழுத்தல், உறியடித்தல் மற்றும் வழுக்கு மரம் ஏறுதல் ஆகிய போட்டிகளில் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் உட்பட சுமார் 700 பேர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் வாணவராயர் வேளாண்மை கல்லூரியின் தாளாளர்கற்பகவள்ளி ராஜ்குமார், கல்லூரி இயக்குநர் முனைவர் கெம்புசெட்டி, கல்லூரி முதல்வர் முனைவர் பிரபாகர் ஆஇயோரின் முன்னிலையில், கல்லூரி மாணவ மன்ற ஆலோசகர் முனைவர்.ரவிகுமார் ஆலோசனை படி மாணவ மன்ற தலைவர் மாணவன் அகிலேஷ் மற்றும் இம்மன்ற மற்ற மாணவர்கள் இனைந்து இவ்விழாவை மிக சிறப்பாக வழி நடத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...