திரைக்கு வந்த அயலான் படம் - கோவையில் உள்ள கோவில்களில் நடிகர் சிவகார்த்திகேயன் தரிசனம்

அயலான் படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் கோவை உக்கடம் பகுதியில் உள்ள ராமர் கோவில் மற்றும் பேரூர் பகுதியில் உள்ள பட்டீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.


கோவை: ஆர்.டி.ராஜா, கொட்டபாடி ஜே.ராஜேஷ் ஆகியோர் தயாரிப்பில், ஆர்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான அயலான் படத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார்.

ஜனவரி 12ஆம் தேதி வெளிவந்த அயாலான் திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது.



இதனிடையே படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் கோவை உக்கடம் பகுதியில் உள்ள ராமர் கோவில் மற்றும் பேரூர் பகுதியில் உள்ள பட்டீஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.



அங்கு வந்த பக்தர்களுடன் செல்பியும் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து அயலான் படத்தை இயக்கிய திருப்பூரைச் சார்ந்த ஆர்.ரவிக்குமார் இல்லத்திற்கு சென்றார். சாமி தரிசனம் போது நடிகர் சிவகார்த்திகேயன் ரசிகர் மன்ற கோவை மாவட்ட தலைவர் வினோத் உடனிருந்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...