கோவையில் நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்த குழந்தை C/O கவுண்டம்பாளையம் படம் வெளியீடு

காதல் வியாபாரம் இல்லை. பெண் பிள்ளைகளை வளர்த்து கசாப் கடைக்கு அனுப்பும் நிலை தான் இப்ப உள்ள காதல் இருக்கு. அதை தான் இந்த படத்தில் சொல்லுகிறோம் என்று குழந்தை C/O கவுண்டம்பாளையம் படம் பற்றி இயக்குநர் ரஞ்சித் பேசினார்.


கோவை: கோவையில் நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்த குழந்தை C/O கவுண்டம்பாளையம் படம் முதல் டீசரை படக்குழுவினருடன் சேர்ந்து நடிகர் ரஞ்சித் வெளியிட்டார்.



இதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.



அப்போது பேசிய நடிகர் ரஞ்சித், நாடக காதலை சொல்லும் படம், பெண் பிள்ளை களை பெற்றவர்களின் வலியை காட்டும் படம், சமத்துவ, சமூகநீதி பேசும் படம், கொங்கு மக்களின் கலாச்சாரத்தை காட்டும் படம்.

நடிகர் ரஞ்சித் குழந்தை C/O கவுண்டம்பாளையம் என்ற படத்தை எழுதி இயக்கி, இதில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளேன். மேலும் பல நடிகர்களை அறிமுகம் செய்து உள்ளோம். இமாம் அண்ணாச்சி, போன்றவர்களும் இந்த படத்தில் நடித்து உள்ளார்கள்.

இந்த படம் சமூகம் சார்ந்த படம் இல்லை. சமத்துவம் உணர்த்தும் குழந்தை காதல் பற்றியது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை வளர்த்து, படிக்க வைத்து நல்லா இருக்க தான் விரும்புவார்கள். நாங்கள் காதலை எதிர்க்க வில்லை. அதற்கு எதிர்ப்பும் இல்லை. அதனை முறையாக செய்ய விரும்புகிறோம்.

காதல் வியாபாரம் இல்லை. பெண் பிள்ளைகளை வளர்த்து கசாப் கடைக்கு அனுப்பும் நிலை தான் இப்ப உள்ள காதல் இருக்கு. அதை தான் இந்த படத்தில் சொல்லுகிறோம்.

சமுதாய, சமத்துவம் சொல்லும் படம் இந்த படம் வெளி வரும் போது மக்கள் கொண்டாடுவார்கள். சாதி பெயரை சொல்லி பணம் பறிக்கும் கூட்டத்தை காட்டும் படம் குழந்தை C/O கவுண்டம் பாளையம். படத்தில் கொங்கு மக்களின் கலாச்சாரத்தை வெளி காட்டி உள்ளேன். இதில் நான் கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு இருந்து பார்த்த விஷயங்களை தருகிறேன். இதற்காக ஏழு ஆண்டு காலம் சினிமாவில் நடிக்காமல் இருந்தேன். இதற்காக நிறைய தகவல்களை சேகரிக்க பயணத்து உள்ளேன்.

இந்த படத்தின் டீசரில் வரும் காட்சியில் ஓசிக கட்சி என்று பேசும் வசனம் சர்ச்சை கிளப்பும் என்ற கேள்விக்கு, அது பற்றி கூறிய ரஞ்சித், ஓசிக என்பது கட்சி இல்லை, ஓசி சோறு பார்ட்டி என்பதின் சுருக்கும். இது சாதிய வன்மம் சொல்லும் படம் இல்லை. சமத்துவம் சகோதர யுத்தம் செய்யும் சிறந்த படம்.

மாட்டுக்கறி திங்கும் ஆள்தானே நீ என்று பேசும் வசனம் குறித்த கேள்விக்கு, சார் இன்று மாட்டு பொங்கல் விழா கொண்டாடும் தினத்தில் படத்தின் முதல் டீசரை வெளியிடுகிறோம். இங்கே அதிகமானவர்கள் மாட்டுக்கறி சாப்பிடும் நபர்கள் உண்டு. ஏன் நானும் மாட்டுக்கறி சாப்பிடுவேன். இது மாட்டுக்கறி சாப்பிடும் நபர்களை தரம் தாழ்த்தி சொல்லும் படம் கிடையாது. அதற்கு எதிரியும் இல்லை. அதன் பெயரை சொல்லி ஏமாற்றும் நபர்களை வெளிக்காட்டும் படம் தான் குழந்தை C/O கவுண்டம் பாளையம்

அந்த இயக்குனர் ரஞ்சித்க்கு தமிழக அரசு ஆதரவு தருது. இந்த கொங்கு, நடிகர் ரஞ்சித்க்கு யார் ஆதரவு என்ற கேள்விக்கு இந்த படம் மூலம் மக்கள் ஆதரவு எனக்கு கிடைக்கும். படத்திற்கு மக்கள் பெரும் அளவில் ஆதரவு தருவார்கள் என்றார்.

நடிகர் ரஞ்சித்திடம் இதற்கு முன்பு காப்பி ஸ்டிட் சண்டே குறித்து ஆண்கள், பெண்கள் ஆடுவதை என்ன கலாச்சாரம். இது ரோட்டில் அரைகுறை ஆடையில் ஆடுவது கலாச்சாரம் பண்பாட்டின் சீர்கேடு பண்பாடு இழிவு என்ற பேச்சு வீடியோ வைரல் ஆனது.

இந்த படத்தில் ஏதும் புரட்சியாக சொல்லும் தகவல் உண்டா என்ற கேள்விக்கு, இந்த படத்தில் சமத்துவ சமூகநீதி சொல்லும் படம், புரட்சி செய்யும் தகவல் இதில் இருக்கு. நாடக காதலை தோலுருத்தி காட்டும் படமாக இருக்கும். நாட்டுக்கும், மக்களுக்கும் நல்ல தகவல் சொல்லி இருக்கோம் என்றார்.

குழந்தை C/Oகவுண்டம் பாளையம் படம் வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் திரையரங்குகளில் திரையிட உள்ளோம் என்றனர். படத்தின் டீசர் வெளியீட்டில் படத்தின் தயாரிப்பாளர் பழனியப்பன் மற்றும் நடிகர்கள், தொழிற்நுட்ப கலைஞர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...