திமுக அரசு விலை வாசியை கட்டுப்படுத்த தவறிவிட்டது - பொள்ளாச்சியில் முன்னாள் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் புகார்

நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் துணை சபாநாயக்கருமான பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


கோவை: முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 107வது பிறந்தநாள் விழாவை தமிழகம் முழுவதும் அதிமுகவினர் கொண்டாடி வருகின்றனர்.



இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நகர அதிமுக சார்பில் மத்திய பேருந்து நிலையம் அருகே எம்ஜிஆர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.



நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் துணை சபாநாயக்கருமான பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது.



நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களுக்கு பொள்ளாச்சி ஜெயராமன் அளித்த பேட்டியின் போது, திமுக ஆட்சியில் எங்கும் ஊழல். எதிலும் ஊழல். கமிஷன், கலெக்சன், கரப்ஷன் என்பதற்கு எடுத்துக்காட்டு தான் மு.க.ஸ்டாலின் ஆட்சி. மக்களுக்கான நல்ல காரியங்களை அரசு செய்வதில்லை. இந்த ஆட்சியின் மீது மக்கள் கோபமடைந்துள்ளனர்.

எழுதாத பேனாவுக்கு ரூ.80 கோடி. ஓடாத கார் ரேஸுக்கு ரூ.44 கோடி நிதி ஒதுக்கும் அரசு, மக்கள் நலனில் அக்கறை இருந்திருந்தால் வெள்ள நிவாரண நிதியை சேர்த்து கொடுத்திருக்கலாம். விலைவாசி ஏற்றத்தை கட்டுப்படுத்த தவறிவிட்டது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு சவால் விட்டு தொழிலாளர்கள் வயிற்றில் அடிக்கும் ஆட்சியாக இந்த ஆட்சி செயல்படுகிறது என குற்றம் சாட்டினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...