அமராவதி ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த மூன்று பேரின் குடும்பத்தினற்கு அமைச்சர் கயல்விழி ஆறுதல்

ஆன்மீக சுற்றுலாவுக்கு சென்று விட்டு மதுரை செல்லும் வழியில் தாராபுரம் புறவழிச்சாலை அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்று சின்னகருப்பு, பாக்கியராஜ், ஹரி ஆகிய மூன்று பேர் பாறை இடுக்குகளில் சிக்கி உயிரிழந்தனர்.


திருப்பூர்: அமராவதி ஆற்றில் நீரில் மூழ்கி உயிரிழந்த மூன்று பேர் குடும்பத்திற்கு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆறுதல் தெரிவித்தார்.



திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஈஷா யோகா மைய ஆன்மீக சுற்றுலாவுக்கு சென்று விட்டு மதுரை செல்லும் வழியில் தாராபுரம் புறவழிச்சாலை அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்று சின்னகருப்பு, பாக்கியராஜ், ஹரி ஆகிய மூன்று பேர் பாறை இடுக்குகளில் சிக்கி உயிர் இழந்தனர்.



உயிரிழந்த மூன்று பேர்களின் உடல்களை தாராபுரம் தீயணைப்புத் துறையினர் மீட்டெடுத்து ஆம்புலன்ஸ் மூலம் தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த துயர சம்பவம் குறித்து தாராபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.



இந்த நிலையில் உள்ளூரில் இருந்த (தாராபுரம்) ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி சம்பவத்தை கேள்விப்பட்டு தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு வந்து உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார் அப்பொழுது, உயிரிழந்த மூன்று பேரின் உறவினர்கள் அமைச்சரின் காலில் விழுந்து கதறி அழுதனர்.

இதனால் கண்கலங்கிய ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி மருத்துவர் அழைத்து பேசினார். அப்போது மூன்று பேர்களின் உடல்களையும் விரைவாக உடற்கூறு ஆய்வு செய்து தரும்படி மருத்துவர்களை வலியுறுத்தினார்.



இறந்த குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்ததுடன் அவர்களுக்கு வேண்டிய உதவியை செய்து கொடுத்தார். அமராவதி ஆற்றில் நீரில் மூழ்கி மூன்று பேர் உயிரிழப்பு சம்பவத்தால் தாராபுரம் அரசு மருத்துவமனை வளாகமே பெரும் சோகமாக காணப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...