தாராபுரத்தில் எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு அதிமுக ஓபிஎஸ் அணி சார்பில் மலர் தூவி மரியாதை

அண்ணாசிலை அருகில் எம்ஜிஆரின் திருவுருவப்படத்திற்கு திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் காமராஜ் தலைமையில் நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 107வது பிறந்தநாள் விழா அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அணி சார்பில் அண்ணாசிலை அருகில் எம்ஜிஆர் அவர்கள் திருவுருவப்படத்திற்கு திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர்

காமராஜ் தலைமையில், நகர செயலாளர் ஜவகர் முன்னிலையில் எம்.ஜி.ஆர். அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.



இந்நிகழ்வில் அவைத்தலைவர் வே‌.தண்டபாணி, நகர துணை செயலாளர் பூபதி, நகர பொருளாளர் நாகேஸ்வரன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் சையத் இப்ராஹிம், மேற்கு ஒன்றிய செயலாளர் மனோகர், வார்டு செயலாளர்கள் கோட்டை குமார், கத்தி சுரேஷ், ஜீவா செல்வம், நகர அம்மா பேரவை செயலாளர் ஜெ.மகேஸ்வரன், நகர இளைஞர் இளம் பெண்கள் பாசறை செயலாளர் அட்லி ரமேஷ், லோகநாதன், ஆர்.குட்டி, காளிமுத்து, நகர இளைஞர் அணி செயலாளர் செந்தில்குமார், மாவட்ட மாணவரணி சுஜித்குமார், நகர சிறுபான்மை பிரிவு செயலாளர் பாவாமைதீன், பேரூர் கழக செயலாளர் சீரைசெல்வம், எல்ஐசி சரவணன், ஜமால், முகமது அலி ஜின்னா ஆகியோர் எம்.ஜி.ஆரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...