திருப்பூரில் மக்கள் நல மன்றத்தின் சார்பில் திருவள்ளுவர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவரின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சீனியம்மாள், தொழில் அதிபர் மகேந்திரன் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


திருப்பூர்: திருப்பூரில் மக்கள் நல மன்றத்தின் சார்பில் 20வது ஆண்டு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு திருவள்ளுவர் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

திருப்பூர் பினலாடைக்கு பிரசித்தி பெற்ற நகரமாகும். இங்கு சுமார் 10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின்னலாடை தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தைத்திருநாள் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு கடந்த வாரம் வெள்ளிக்கிழமை அன்று பின்னலாடை நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் திருப்பூர் ராயபுரம் பகுதியில் உள்ள மக்கள் நல மன்றத்தின் சார்பில் இருபதாம் ஆண்டு மூன்று நாட்கள் பொங்கல் திருவிழா நடைபெற்று வருகிறது.



இரண்டாம் நாளான திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு திருவள்ளுவரின் திருவுருவப்படத்திற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சீனியம்மாள், தொழில் அதிபர் மகேந்திரன் ஆகியோர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.



தொடர்ந்து பொதுமக்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கி பொங்கல் விழாவினை வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். மேலும் திருப்பூரில் வசிக்கும் இப்பகுதி மக்களுக்கு மக்கள் நல மன்றத்தின் சார்பில் நடைபெற்று வரும் பொங்கல் விழா விளையாட்டு போட்டிகள் அப்பகுதியில் பெரும் வரவேற்பை கொடுத்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...