காங்கேயம் அதிமுக ஒன்றிய கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா கொண்டாட்டம்

நெய்க்காரன் பாளையம், ஆலம்பாடி, சகாயபுரம், கலைஞர் நகர், நத்த காட்டு வலசு, வரப்பாளையம், சந்தியா நகர், காடையூர், சிவன்மலை, படியூர், நத்தக்காடையூர் ஆகிய பகுதிகளில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாநகர் மாவட்டம், காங்கேயம் ஒன்றிய அதிமுக கழகம் சார்பில் முன்னாள் முதல்வர், பாரத ரத்னா, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 107 வது பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.



காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், ஒன்றிய கழகச் செயலாளருமான என்.எஸ்.என் நடராஜ் தலைமையில் 10 மேற்பட்ட ஊராட்சி பகுதிகளில் எம்ஜிஆர் அவர்களின் 107 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கழக கொடிக்கம்பங்களில் கொடியேற்றி, எம்ஜிஆர் அவர்களின் திரு உருவப்படங்களுக்கு மலர் தூவி மாலை அணிவித்தும், பொங்கல் வைத்து இனிப்புகள் வழங்கப்பட்டும் கொண்டாடி வருகின்றனர்.

இதில் காங்கேயம் ஒன்றியத்திற்கு உட்பட்ட நெய்க்காரன் பாளையம், ஆலம்பாடி, சகாயபுரம், கலைஞர் நகர், நத்த காட்டு வலசு, வரப்பாளையம், சந்தியா நகர், காடையூர், சிவன்மலை, படியூர், நத்தக்காடையூர் ஆகிய பகுதிகள் ஆகும். முதலில் நெய்க்காரன்பாளையத்தில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் மாவட்ட கழக துணை செயலாளர் லட்சுமி சோமசுந்தரம், ஒன்றிய கழக துணை செயலாளர் திருச்செந்தில், காமாட்சிபுரம் மணி, லோகேஸ்வரன் உட்பட 150க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.

மேலும் எம்ஜிஆரின் சிறப்புக்கள் குறித்தும் அவர் நடித்த படங்களின் பாடல்கள் வரிக்குறித்தும் சிறப்பாக எடுத்துக்கூறப்பட்டது. புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி அம்மா அவர்கள் வழியில் 4 ஆண்டுகள் சிறப்பாக ஆட்சி செய்தவர் நமது முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் எனவும், தற்போது எதிர்க்கட்சித் தலைவராகவும் சிறப்பாக செயற்படுகின்றார் எனவும், மீண்டும் அதிமுக எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் எப்போது ஆட்சி அமையும், அதில் எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் அரியணையில் ஏறுவார் என பொதுமக்கள் காத்திருக்கின்றனர் என காங்கேயம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.எஸ்.என்.நடராஜ் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...