காங்கேயம் நகர கழக அதிமுக சார்பில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் 107வது பிறந்தநாள் விழா கொண்டாட்டம்

காங்கேயம் பேருந்து நிலையம் எதிரே, பாரதியார் வீதி, திருவிகநகர், லட்சுமிநகர், மூர்த்திரெட்டிபாளையம், அய்யாசாமி காலனி, களிமேடு, கார்திகைநகர், புலிமாநகர் உட்பட ஏராளமான பகுதிகளில் எம்ஜிஆரின் திருவுருவப்படங்களுக்கு நிர்வாகிகள் மலர்த்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


திருப்பூர்: திருப்பூர் மாநகர் மாவட்டம் காங்கேயம் நகர கழக அதிமுக சார்பில் முன்னாள் முதல்வரும், புரட்சித்தலைவரும் எம்ஜிஆரின் 107 பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டு திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இந்த விழா நகர கழக செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன் தலைமையில் நடைபெற்றது. காங்கேயம் நகர கழகம் சார்பில் காங்கேயம் நகராட்சிக்கு உட்பட்ட 18 வார்டு பகுதிகளிலும் நகர கழக நிர்வாகிகளுடன் இந்த பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.



காங்கேயம் பேருந்து நிலையம் எதிரே, பாரதியார் வீதி, திருவிகநகர், லட்சுமிநகர், மூர்த்திரெட்டிபாளையம், அய்யாசாமி காலனி, களிமேடு, கார்திகைநகர், புலிமாநகர் உட்பட ஏராளமான பகுதிகளில் திருவுருவப்படங்களுக்கு மலர்த்தூவி மாலை அணிவிக்கப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கழக புரட்சித்தலைவி பேரவை மாநில துணைச்செயலாளர் ஆற்றல் அசோக்குமார், மாநகர் மாவட்ட பொருளாளர் கே.ஜி.கே.கிஷோர்குமார், மாநகர் மாவட்ட இளைஞர் அணி இணை செயலாளர் சி.கந்தசாமி, மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் ஏ.பி.துரைசாமி, மாவட்ட வர்த்தக அணி துணை செயலாளர் என்.பாலகிருஷ்ணன், மாவட்ட வழக்கறிஞர் அணி பொருளாளர் எஸ்.செல்வகுமார், நகர கழக அவைத்தலைவர் கே.கே.பழனிச்சாமி, நகர துணை செயலாளர் ஏ.ஏ.பழனிச்சாமி உட்பட ஏராளமான கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...