திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் கொண்டாட்டம் - உறி அடித்து, சிலம்பம் சுற்றி ஆட்சியர் மகிழ்ச்சி

பொங்கல் விழாவில் 101 பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர். இதில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் அரவிந்த் குமார் ஆகியோர் மாட்டுவண்டியில் வந்து விழாவை சிறப்பித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் கலந்து கொண்டு மாட்டு வண்டியில் வந்து உறி அடித்தும், சிலம்பம் சுற்றியும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

திருப்பூர் மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் சாமளாபுரம் குளக்கரையை மையப்படுத்தி சாமளாபுரம் குளக்கரையில் குளக்கரை சுற்றுலா பொங்கல் என திட்டமிடப்பட்டு பொங்கல் விழா நடத்தப்பட்டது.



இந்த பொங்கல் விழாவில் 101 பெண்கள் கலந்துகொண்டு பொங்கல் வைத்து கொண்டாடினர்.



இதில் சிறப்பு விருந்தினராக திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் கலந்து கொண்டார்.



பொங்கல் வைத்த நிகழ்வு நிறைவடைந்த பின்பு சாமளாபுரம் குளக்கரையில் இருந்து பாரம்பரிய விளையாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் மாரியம்மன் கோவில் திடல் வரை மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் அரவிந்த் குமார் ஆகியோர் மாட்டுவண்டியில் வந்தனர்.



இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் உறி அடித்தும், சிலம்பம் சுற்றியும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து சிலம்பாட்டம், கரகாட்டம், வள்ளி கும்மி ஆட்டம், சிலம்பாட்டம் ஆகியவற்றை பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...