கருமலை எஸ்டேட் பகுதியில் 1935 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா

விழாவில் அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களாகிய மருத்துவர்கள், நீதியரசர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், காவல்துறை அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், போக்குவரத்து துறை பணியாளர்கள், ரயில்வே துறை பணியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டு தங்களது பள்ளிக்கால நினைவுகளை நினைவு கூர்ந்தனர்.


கோவை: வால்பாறை அருகே 1935 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது. கோவை மாவட்டம் வால்பாறை அருகே கருமலை எஸ்டேட் பகுதியில் 1935 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு விழா நடைபெற்றது.



விழாவில் அப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்களாகிய மருத்துவர்கள், நீதியரசர்கள், வழக்கறிஞர்கள், பொறியாளர்கள், காவல்துறை அதிகாரிகள், வங்கி அதிகாரிகள், போக்குவரத்து துறை பணியாளர்கள், ரயில்வே துறை பணியாளர்கள், ராணுவ அதிகாரிகள், தனியார் மற்றும் அரசுத்துறை ஆசிரியர்கள், பேராசிரியர்கள், தொலைத் தொடர்பு துறை பணியாளர்கள், அஞ்சல் துறை அலுவலர்கள், மத்திய மாநில வரித்துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள், தனியார் துறை நிறுவனம் மேலாளர்கள், வணிகர்கள் மற்றும் பல்துறை வல்லுனர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் முன்னாள் ஆசிரியர்களும், முன்னாள் மாணவர்களும், இந்நாள் ஆசிரியர் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டு பழைய நினைவுகளை நினைவுகூர்ந்தனர்.



இவ்விழாவில் கருமலை பள்ளியின் புகை படத்தை அஞ்சல் துறையில் தாபல் தலையாக வெளியிட்டனர். இதை முன்னாள் மாணவர்கள் இந்நாள் மாணவர்களிடம் வழங்கினர்.

விழாவில் முன்னாள் மாணவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள், பேச்சுப்போட்டி, கவிதை போட்டி மற்றும் சிரியவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் முதலானவைகள் நடைபெற்று, ஆசிரியர் மற்றும் முன்னாள் மாணவ மாணவிகளுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. விழா குழு உறுப்பினர்கள் தமிழ்வேந்தன், அன்புசேகர், மாதவன், தெய்வானை, ராஜமார்த்தாண்டன், மகாராஜா, அசோக் குமார், சூசி, ராமதாஸ், பரமசிவம், பிரபு, செந்தில், அன்புராஜ் ஆகியோர்கள் விழாவினை நடத்தினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...