திமுக இளைஞர் அணி சார்பில் பொள்ளாச்சியில் 300 காளை மாடுகள் பங்கேற்ற மாபெரும் ரேக்ளா போட்டி

ரேக்ளா போட்டியில் கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் கேராளவை சேர்ந்த ஏராளமான மாட்டு வண்டி வீரர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்ற காளை உரிமையாளர்களுக்கு முதல் பரிசாக ரூ.50,000, இரண்டாம் பரிசாக ரூ.40 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.30,000 மற்றும் தங்க நாணயங்கள் வழங்கப்பட்ட உள்ளன.


கோவை: திமுக இளைஞரணி மாநாட்டை முன்னிட்டு கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் 300 காளைகள் பங்கேற்ற மாபெரும் ரேக்ளா போட்டி பொள்ளாச்சி அடுத்த சி.கோபாலபுரம் பகுதியில் நடைபெற்றது.



இதில் கோவை, ஈரோடு, திருப்பூர் மற்றும் கேராளவை சேர்ந்த ஏராளமான மாட்டு வண்டி வீரர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டிகள் 200 மீட்டர் மற்றும் 300 மீட்டர் என போட்டிகள் நடைபெற்றது.



இதில் கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் கலந்து கொண்டு முதலாவதாக வண்டி ஓட்டினார்.



திமுக மாநில தகவல் தொழில்நுட்ப அணி இணை செயலாளர் டாக்டர் மகேந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இப்போட்டியில் கலந்துகொண்ட காளைகள் சீறி பாய்த்தது பார்பவர்களை மிரள செய்தது.



இப்போட்டியை காண சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமான பொதுமக்கள், இளைஞர்கள் ஆர்வத்துடன் போட்டி கண்டு மகிழ்ச்சி அடைத்தனர். கோவை தெற்கு மாவட்ட பொருளாளரும் சீ.கோபாலபுரம் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயப்பிரகாஷ், மெடிக்கல் பரமசிவம், திமுக சுற்றுச்சூழல் அணியின் நிர்வாகிகள் மற்றும் தமிழ் கலாச்சார அறக்கட்டளை நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். வெற்றி பெற்ற காளை உரிமையாளர்களுக்கு முதல் பரிசு ரூ.50,000, இரண்டாம் பரிசு ரூ.40 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ.30,000 மற்றும் தங்க நாணயங்கள் வழங்கப்பட்ட உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...