ஊத்துகாடு ரோட்டில் உள்ள விநாயகர் கோவிலை அகற்ற எதிர்ப்பு - நகராட்சி ஆணையர் முற்றுகை

சாலையை ஆக்கிரமித்து கட்டியுள்ளதாக விநாயகர் கோவிலை அகற்ற உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது சம்பந்தமாக விசாரித்த உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் 15 தினங்களுக்குள் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் கோவிலை அகற்ற வேண்டும் என தீர்ப்பு அளித்துள்ளது.


கோவை: பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட ஊத்துகாடு ரோட்டில் உள்ள விநாயகர் கோவில் அகற்றாவிட்டால் சிறை தண்டனை விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியதை திரும்ப பெற கோரி எம்எல்ஏ பொள்ளாச்சி ஜெயராமன் உள்ளிட்ட அதிமுகவினர் நகராட்சி ஆணையரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட ஊத்துக்காடு ரோடு நல்லிக்கவுண்டர் லே அவுட் சந்திப்பில் சாலையை ஆக்கிரமித்து கட்டியுள்ளதாக விநாயகர் கோவிலை அகற்ற உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது சம்பந்தமாக விசாரித்த உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பில் 15 தினங்களுக்குள் ஆக்கிரமித்துள்ளதாக கூறப்படும் கோவிலை அகற்ற வேண்டும் என தீர்ப்பு அளித்ததாக கூறப்படுகிறது. இது சம்பந்தமாக நகராட்சி நிர்வாகம் சார்பில் கோவிலை அகற்றக்கோரி சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது.



அந்த நோட்டீஸில் 15 தினங்களுக்குள் கோவிலை அகற்றாவிட்டால் மூன்று ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்படும் என கூறப்பட்டிருந்ததை கண்டித்து இன்று பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், பொள்ளாச்சி நகர அதிமுக செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில், ஊத்துக்காடு பகுதியை சேர்ந்த பொதுமக்களுடன் பொள்ளாச்சி நகராட்சி ஆணையாளர் சுப்பையாவை சந்தித்து விநாயகர் கோவிலை அகற்ற கோரிய நோட்டீசை திரும்ப பெற வலியுறுத்தி மனு அளித்தனர்.



மேலும் ஒரு சில ஆளுங்கட்சியினர் தூண்டுதலால் இது போன்ற நடவடிக்கை யில் ஈடுபடுவதை நகராட்சி ஆணையாளர் மற்றும் அதிகாரிகள் கைவிட வேண்டும் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.



தொடர்ந்து செய்தியாளிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன், பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் குப்பைகள் அகற்றப்படாமல் தேங்கி கிடப்பதாகவும், பல ஆண்டுகளாக பொதுமக்கள் வழிபட்டு வரும் விநாயகர் கோவிலை இடிக்க கூடாது, தொடர்ந்து அதிகாரிகள் இது போன்ற செயலில் ஈடுபட்டால் அதிமுக சார்பில் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...