தாராபுரத்தில் வள்ளுவர் தெருவில் திருவள்ளுவர் சமூகத்தைச் சேர்ந்த இரு பிரிவினர்களுக்கு இடையே மோதல்

எம்ஜிஆர் பிறந்தநாள் விழா மற்றும் பொங்கல் விளையாட்டு போட்டிகளை நடத்துவதில், திருவள்ளுவர் குலச்சங்கம் திருவள்ளுவர் இளைஞர் நற்பணி மன்றதை சேர்ந்த நபர்களுக்கும், வாழும் வள்ளுவர்குலம் இளைஞர் நலச்சங்கத்தை சேர்ந்தவர்களுக்கும் மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பூளவாடி ரோடு, திருவள்ளுவர் தெருவில் வசித்து வரும் வாழும் வள்ளுவர்குலம் இளைஞர் நலச்சங்கத்தை சேர்ந்த ஒரு பிரிவினருக்கும், அதே பகுதியில் வசித்து வரும் திருவள்ளுவர் குலச்சங்கம் திருவள்ளுவர் இளைஞர் நற்பணி மன்றதை சேர்ந்த மற்றொரு பிரிவினருக்கும், இடையே பொங்கல் விழா மற்றும் திருவள்ளுவர் பிறந்த நாள் விழா கொண்டாடுவதில் கருத்து வேறுபாடு இருந்துள்ளது.



இருவரும் அந்தோனியார் அரசு உதவி பெறும் பள்ளி எதிரே உள்ள பொது வளாகத்தில் பொங்கல் விழா போட்டிகளை இரு பிரிவினரும் தனித்தனியே நடத்தி வந்தனர். இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு தாராபுரம் டி.எஸ்.பி. கலையரசன் தலைமையில் எஸ்.ஐ. விஜயபாஸ்கர் முன்னிலையில் இரு தரப்பினரும் எந்த நாட்களில் எந்த நேரத்தில் போட்டிகள் மற்றும் விழாக்கள் நடத்த வேண்டும் என பட்டியலிட்டு கொடுக்கப்பட்டிருந்தது.



இந்த நிலையில் எம்ஜிஆரின் 107-ஆவது பிறந்தநாள் விழா மற்றும் பொங்கல் விளையாட்டு போட்டிகளை ஒரு பிரிவினர் திருவள்ளுவர் குலச்சங்கம் திருவள்ளுவர் இளைஞர் நற்பணி மன்றதை சேர்ந்த நபர்கள் நடத்தி வந்தனர். இதில் மற்றொரு பிரிவான வாழும் வள்ளுவர்குலம் இளைஞர் நலச்சங்கத்தை சேர்ந்தவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் விளையாட்டுப் போட்டிகள் நடத்தியதாக கூறி மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு பிரிவினர்களும் இடையே வாய் சண்டை இட்டுக் கொண்டனர்.



இதில் ஒரு பிரிவினர் மற்றொரு பிரிவினரை ஒருமையில் பேசியதாக கூறி தாராபுரம் காவல் நிலையத்தை ஆண்கள்- பெண்கள் என 100-க்கும் மேற்பட்டோர் தங்கள் குல பெண்களை ஒறுமையில் பேசியதாகவும், அவ்வாறு பேசிய மற்றொரு பிரிவில் உள்ள நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி காவல் நிலைய முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தாராபுரம் காவல் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அதனைத் தொடர்ந்து நாளை ஜனவரி 18-ம் தேதி காலை சம்பந்தப்பட்ட இடத்திற்கு போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தி. உண்மை எனத் தெரியும் பட்சத்தில் ஒருமையில் பேசிய நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து தருவதாக போலீசார் வாக்குறுதி அளித்தனர்.



இதனைத் தொடர்ந்து சாலை அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட திருவள்ளுவர் குலச்சங்கத்தை சேர்ந்தவர்கள் அங்கிருந்து தற்காலிகமாக கலைந்து சென்றனர். ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு பிரிவினர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலால் தாராபுரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...