முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாமில் பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் ஆய்வு

நகராட்சிக்கு உட்பட்ட 12, 13, 17 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட பதிவு செய்யும் முகாம் பொள்ளாச்சி லாரி அசோசியன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ காப்பீட்டுதற்கான பதிவுகளை செய்தனர்


கோவை: முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம் கடந்த 10ம் தேதி முதல் பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் நடைபெற்று வருகிறது.

இன்று பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட 12, 13, 17 வது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்ட பதிவு செய்யும் முகாம் பொள்ளாச்சி லாரி அசோசியன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.



இதில் அப்பகுதி சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ காப்பீட்டுதற்கான பதிவுகளை செய்தனர். இந்த முகாமை பொள்ளாச்சி நகராட்சி தலைவர் சியாமளா நவநிதகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களுக்கு விரைந்து மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை கிடைக்க வகையில் விரைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆலோசனை வழங்கினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...