கோடநாடு எஸ்டேட்டிற்கு முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பயணம்

நாளை கோடநாடு எஸ்டேட் வளாகத்தில் ஜெயலலிதா சிலை அமைப்பதற்கான பூமி பூஜையில் சசிகலா பங்கேற்கின்றார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை வரை கோடநாடு எஸ்டேட்டில் தங்கி இருக்கும் சசிகலா அதன்பின்பு சென்னை திரும்புகிறார்.


கோவை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஏழு வருடங்களுக்கு பின்னர் இன்று கோடநாடு எஸ்டேட்டிற்கு பயணமானார். அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்தவர் சசிகலா. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் அக்கட்சியின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். வழக்கு தொடர்பாக சசிகலா சிறைக்கு சென்ற நேரத்தில் அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

சசிகலா சிறையில் இருந்த நேரத்தில் கோடநாடு பங்களாவில் காவலாளி ஓம் பகதூரை கொலை செய்துவிட்டு, அங்கு இருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டன. இது தொடர்பான வழக்கு விசாரணை தற்போது வரை நடைபெற்று வருகிறது. ஜெயலலிதா, சசிகலா ஆகிய இருவரும் அடிக்கடி ஓய்வெடுக்கும் இடமாக கோடநாடு எஸ்டேட் இருந்து வந்தது. ஒரு மினி தலைமைச் செயலகமாக கோடநாடு எஸ்டேட் இருந்து வந்த நிலையில், ஜெயலலிதா மறைவிற்கு பின்னர், கோடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற கொலை கொள்ளை சம்பவம் உள்ளிட்ட காரணங்களால் சசிகலா அங்கு செல்லவில்லை.

சிறையில் இருந்து விடுதலையான பின்னரும் அவர் சென்னையிலேயே வசித்து வந்தார்.



இந்நிலையில் 7 ஆண்டுகளுக்கு பின்னர் சசிகலா இன்று கோடநாடு எஸ்டேட்டுக்கு செல்கிறார். சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த அவர், சாலை மார்க்கமாக கோடநாடு கிளம்பிசெல்கின்றார். சென்னை மற்றும் கோவை விமான நிலையங்களில் செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்த்த சசிகலா, நேராக கோடநாடு எஸ்டேட் சென்றார்.

நாளை கோடநாடு எஸ்டேட் வளாகத்தில் ஜெயலலிதா சிலை அமைப்பதற்கான பூமி பூஜையில் சசிகலா பங்கேற்கின்றார். பின்னர் ஞாயிற்றுக்கிழமை வரை கோடநாடு எஸ்டேட்டில் தங்கி இருக்கும் சசிகலா, சென்னை திரும்புகிறார். வரும் பிப்ரவரி 24 ம் தேதிக்குள் ஜெயலலிதாவின் முழு உருவ சிலை அமைக்கப்பட்டு அதன் திறப்பு விழாவை நடத்தவும் திட்டமிடப்பட்டு இருப்பதாக சசிகலா ஆதரவாளர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...