குடிநீர் விநியோகம் செய்யக் கோரி ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு

கீரணத்தம் வடக்கு குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 100 குடும்பங்களுக்கு கடந்த ஒரு வாரமாக குடிநீர் கிடைக்கவில்லை. புதிதாக நியமிக்கப்பட்ட குடிநீர் விநியோக பணியாளர் முறையாக பணி செய்யவில்லை. மக்கள் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


கோவை: கோவை, கீரணத்தம் வடக்குப் பகுதியில் முறையாக குடிநீர் விநியோகம் செய்யக் கோரி அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் நேற்று ஜன.18 மனு அளித்தனர்.

இதுகுறித்து கொங்குநாடு அருந்ததியர் முன்னேற்ற பேரவை நிறுவனத் தலைவர் இளங்கோவன் தலைமையில் மக்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

"கீரணத்தம் வடக்கு திட்டப் பகுதியில் சுமார் 640 வீடுகள் கொண்ட குடிசை மாற்று வாரிய குடியிருப்பில் 100 குடும்பங்கள் வசித்து வருகிறோம். இங்கு கடந்த ஓராண்டாக குடிநீர் விநியோகம் செய்துகொண்டிருந்த பணியாளரை நீக்கிவிட்டு வேறு வேறு ஒரு பணியாளரை குடிசை மாற்று வாரியத்தினர் நியமித்துள்ளனர். புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நபர் முறையாக குடிநீர் விநியோகம் செய்வதில்லை. இதனால், கடந்த ஒரு வாரமாக குடிநீர் கிடைக்காமல் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகிறோம்.

இதுகுறித்து குடிசை மாற்று வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், இப்பகுதியில் முட்புதர்கள் மண்டிக்கிடப்பதுடன், கழிவுநீர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உள்ளன. எனவே, இப்பிரச்னைகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர், குடிசை மாற்று வாரிய அதிகாரிகளுக்கு உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்."

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...