ஈச்சனாரியில் ரத்தினம் குழுமம் அமைத்துள்ள அடல் இன்குபேஷன் சென்டரில் புதிய ஆய்வகம் திறப்பு விழா!

ஈச்சனாரியில் உள்ள ரத்தினம் குழுமத்தின் அடல் இன்குபேஷன் சென்டரில் புனையமைப்பு ஆய்வகம் திறப்புக்கு இந்தியாவின் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் திரு முரளிதரன் பங்கேற்றார்.


கோவை: ஈச்சனாரியில் அமைந்துள்ள இரத்தினம் குழுமத்தின் அடல் இன்குபேஷன் சென்டர் ரைஸில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புனையமைப்பு ஆய்வகத்தை (ஃபேப் லேப்) இந்தியாவின் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் திறந்து வைத்தார். இந்த ஆய்வகம் இளம் தொழில் முனைவோர்களுக்கு ஆய்வு திறனை ஊக்குவித்து, ஐ ஓ டி சாதனங்கள், முப்பரிமாண அச்சுப்பொறிகள் போன்ற முன்னோடி தொழில்நுட்பங்களை வழங்குகிறது.

இந்த நிகழ்வில், பிறவியிலேயே காது கேளாதோர்களுக்கான கருவிகளை தயாரிக்கும் ஸ்டார்ட்அப் பேக்யார்ட் கிரியேடர்ஸ் நிறுவனர்கள் ராமன், லட்சுமணன், சூரிய மின் உற்பத்தித் தளங்களில் உபகரணங்களை தூய்மைப்படுத்தும் ரோபோக்களை உருவாக்கும் ஸ்டார்ட்அப் சொலேவியோ இணை நிறுவனர் பிரசாந்த், மற்றும் செயற்கை நுண்ணறிவு மூலம் கருவிகளை உருவாக்கும் வட்டளோ மின்சுற்றுகளை ஒருங்கிணைக்கும் நிறுவனர் அமிர்தேஷ் மற்றும் கழிவு மேலாண்மை சார்ந்து செயல்படும் செர்க்கிள் எக்ஸ்-ன் நிறுவனர்கள் விஷ்ணு வரதன் மற்றும் திவ்யா ஷெட்டி அவர்களிடம் செர்க்கிள் எக்ஸ் பற்றிய கலந்துரையாடினார்.

இந்த நிகழ்வில் அடல் இன்குபேஷன் சென்டரின் தலைவர் டாக்டர் மதன் ஏ செந்தில் மற்றும் துணைத் தலைவர் டாக்டர் நாகராஜ் பாலக்கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்று, இந்த ஆய்வகத்தின் வளர்ச்சிக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். இந்த ஆய்வகம் இளம் தொழில் முனைவோர்களுக்கு புதிய வாய்ப்புகளை தருவதோடு, தொழில்நுட்ப நவீனத்துவத்தின் முன்னோடிகள் என்ற நிலையையும் உயர்த்தும்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...