துடியலூர் ஆர்.டி.ஒ அலுவலகம் அருகில் ரூ.6.80 லட்சம் மதிப்பில் சிமெண்ட் கான்கீரிட் தளம் பணி தொடங்கி வைப்பு

அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் ஆகியோர் தலைமை தாங்கி புதிய சிமெண்ட் கான்கீரிட் தளம் அமைக்கும் பணியினை பூமி பூஜை செய்து வேலையை தொடங்கி வைத்தனர்.


கோவை: கோவை மாநகராட்சி 2வது வார்டுக்குட்பட்ட துடியலூர் ஆர்.டி.ஒ அலுவலகம் அருகில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் ரூ.6.80 லட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் கான்கீரிட் தளம் அமைக்கும் பணியினை எம்.எல்.ஏ. பி.ஆர்.ஜி. அருண்குமார் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.

கோவை மாநகராட்சி 2வது வார்டுக்குட்பட்ட துடியலூர் ஆர்.டி.ஒ அலுவலகம் அருகில் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து சுமார் ரூ.6.80 லட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் கான்கீரிட் தளம் அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. இதற்கு சின்னவேடம்பட்டி பகுதி 2வது வார்டு செயலாளர்கள் ஜெயகுமார், காளிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

அதிமுக கோவை புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் மற்றும் கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து வேலையை தொடங்கி வைத்தார்.



தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

அப்போது பெண் தொண்டர் ஒருவர் சட்ட மன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி.அருண்குமார் முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் பாடலை பாடினார். இந்த பூமி பூஜையில் அம்மாபேரவை பகுதி செயலாளர் கவிசந்திரமோகன், வார்டு கவுன்சிலர்கள் சாந்திபூசன், பந்தல்வீடு பிரகாஷ், சுரேஷ்குமார், பகுதி துணை செயலாளர் சரவணபாண்டியன், துணை செயலாளர் கோமதி, பகுதி அவைத்தலைவர் ஐ.டி.ஐ.ஜெயராஜ், அண்ணா தொழிற்சங்க பகுதி செயலாளர் முருகேஷ், பகுதி வணிக பேரவை தலைவர் செல்வம், 2வது வார்டு அவைத்தலைவர் செல்வராஜ், பொருளாளர் திருநாவுக்கரசு, சி.டி.சி பேபி, சி.டி.சி சிவலிங்கம், சி.டி.ஐ கோபி, பாலாஜி, மோகன்ராஜ், மணி, மைதிலி ஜெயந்தி உட்பட பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...