திருப்பூரில் தனியார் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் ஏழாம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா

விழாவில், குழந்தைகளின் த்ரோபால், சிலம்பாட்டம், லெமன் ஸ்பூன் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. சிறிய குழந்தைகள் சிலம்பம் சுற்றுவதை கண்டு ஏராளமானோர் வியப்பில் ஆழ்ந்தனர். விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: திருப்பூர் அவிநாசி சாலை காந்திநகர் பகுதியில் உள்ள ஏ.வி.பி லே-அவுட் குடியிருப்போர் நலச் சங்கத்தின் சார்பில் ஏழாம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர்.T.N.துரை தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக குழந்தைகளின் த்ரோபால், சிலம்பாட்டம், லெமன் ஸ்பூன் போன்ற விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. சிறிய குழந்தைகள் சிலம்பம் சுற்றுவதை கண்டு ஏராளமானோர் வியப்பில் ஆழ்ந்தனர். விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில் குடியிருப்போர் நலச் சங்கத்தின் துணைச் செயலாளர்.V.T.பிரபு (எ) கோபிநாதன், குடியிருப்போர் நல சங்கத்தின் பொறுப்பாளர் பாலசுப்ரமணி, குடியிருப்போர் நல சங்கத்தின் செயலாளர் K. வெள்ளியங்கிரி, குடியிருப்போர் நலச் சங்க பொருளாளர் சிவலிங்கம் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...