கோவையில் விதிகளை மீறி கட்டப்பட்ட வணிகக் கட்டடத்துக்கு சீல் வைப்பு

இடையர் வீதியில் கீழ் தளம் மற்றும் முதல் தளம் என 3,821 சதுர அடி பரப்பு கட்டடத்துக்கு அனுமதி வாங்கி விட்டு, ஆயிரத்து 528 சதுர அடி பரப்புக்கு, 19 அறைகளுடன் கட்டப்பட்ட வணிக கட்டடத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.


கோவை: கோவை நகருக்குள் அனுமதியற்ற, விதிமீறல் கட்டடங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் ஒரு வழக்கில், 'அனுமதியற்ற கட்டடம் கட்டுவோர் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், கோவையில், அனுமதியற்ற கட்டடம் மீது, மாநகராட்சி நிர்வாகம் நேற்று அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி கோவை, இடையர் வீதியில் கீழ் தளம் மற்றும் முதல் தளம் என 3,821 சதுர அடி பரப்பு கட்டடத்துக்கு அனுமதி வாங்கி விட்டு, கீழ்தளம் மற்றும் இரண்டு தளங்கள் என மூன்று தளங்களில், 11 ஆயிரத்து 528 சதுர அடி பரப்புக்கு, 19 அறைகளுடன் வணிகக் கட்டடம் கட்டப்பட்டிருந்தது. அவற்றில், பல அறைகள், தங்க நகை தயாரிப்புக்கான தொழிற்கூடங்களுக்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தன.

இதையறிந்த மாநகராட்சி நகர அமைப்பு அதிகாரிகள், அந்த கட்டடத்துக்கு நோட்டீஸ் கொடுத்தனர். அங்கிருந்த தொழிற்கூடங்களை காலி செய்ய அவகாசம் தரப்பட்டது. கோவை மாநகராட்சி நகர அமைப்பு அலுவலர் குமார் தலைமையில், உதவி நகர அமைப்பு அலுவலர் ஜெயலட்சுமி மற்றும் ஊழியர்கள், நேற்று காலையில் அந்த கட்டடத்தை மூடி 'சீல்' வைத்தனர்.

மேலும் விதிமீறல் கட்டடம் என்பதற்கான அறிவிப்பையும் அங்கு ஒட்டினர். பல ஆண்டுகளுக்குப் பின்பு, கோவையில் விதிமீறல் வணிகக் கட்டடம் மீது எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை, விதிகளை மீறி வணிகக் கட்டடம் கட்டியுள்ள பலருக்கும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல, 'பார்க்கிங்'கை வணிகப்பகுதியாக மாற்றிய கட்டடங்களுக்கும் சீல் வைக்க வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...