ஈஷா சார்பில் பொள்ளாச்சியில் பிரம்மாண்டமாக நடந்த தென்னை வளர்ப்பு பயிற்சி - விவசாயிகள் பங்கேற்பு

ஒருங்கிணைந்த தென்னை வளர்ப்பு பயிற்சி என்ற சிறப்பு பயிற்சி பொள்ளாச்சியில் உள்ள என்.ஜி.எம் கல்லூரியில் நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, விழுப்புரம், குடகு, மைசூரு, தும்கூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.


கோவை: ஈஷா அவுட்ரீச் அமைப்பு சார்பில் பொள்ளாச்சியில் ஒருங்கிணைந்த தென்னை வளர்ப்பு பயிற்சி (ஜன 19) பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் பங்கேற்று பயன்பெற்றனர்.

விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்காக ஈஷா அவுட்ரீச் அமைப்பு பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதில் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டில் 19, கர்நாடகாவில் 6 என மொத்தம் 25 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களை ஈஷா அவுட்ரீச் அமைப்பு வழி நடத்தி வருகிறது. இதில் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். அந்த விவசாயிகள் விளைவிக்கும் வேளாண் பொருட்களை அவர்களின் நிறுவனங்களின் மூலமே நேரடி விற்பனை செய்வது, உற்பத்தி முதல் அறுவடை வரையிலான காலங்களில் விவசாயிகள் சந்திக்கும் சவால்களை கண்டறிந்து அதற்கு தீர்வு அளிப்பது, பயிர் சார்ந்த பயிற்சிகளை நடத்துவது போன்ற பணிகளை ஈஷா செய்து வருகிறது.



அந்த வகையில், ஈஷா வழிநடத்தும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களில் உறுப்பினர்களாக உள்ள தென்னை விவசாயிகள் பயன்பெறும் விதமாக 'ஒருங்கிணைந்த தென்னை வளர்ப்பு பயிற்சி' என்ற சிறப்பு பயிற்சி பொள்ளாச்சியில் உள்ள என்.ஜி.எம் கல்லூரியில் இன்று நடைபெற்றது. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், நீலகிரி, விழுப்புரம், குடகு, மைசூரு, தும்கூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு ஆழியார் நகரில் உள்ள தென்னை ஆராய்ச்சி நிலைய வேளாண் வல்லுநர்களும், முன்னோடி விவசாயிகளும், தென்னை விவசாயத்தில் அதிக லாபம் எடுப்பதற்கு பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனைகள் வழங்கினர். காலை 9 மணிக்கு தொடங்கி இப்பயிற்சி மாலை 5 மணி வரை நடைபெற்றது. கேரளா மாநிலம் காசர்கோட்டில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி மணிகண்டன் தென்னையில் விளையும் பொருட்களை மதிப்பு கூட்டி விற்பது குறித்தும், முன்னோடி தென்னை விவசாயிகள் வள்ளுவன், திருமதி, யமுனா தேவி, மகேஷ் அரசு ஆகியோர் தென்னைக்குள் ஊடுபயிர் செய்து கூடுதல் லாபம் எடுப்பது மற்றும் மதிப்பு கூட்டி விற்பனை செய்வது குறித்து பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.



இப்பயிற்சியின் ஒரு பகுதியாக. வேட்டைக்காரன் புதூரில் உள்ள வள்ளுவன் அவர்களின் மாதிரி பண்ணைக்கு விவசாயிகள் நேரில் சென்று பார்வையிட்டனர். அப்போது, பல பயிர் சாகுபடி முறையின் மூலம் அவருடைய பண்ணை எந்தளவுக்கு சுற்றுச்சூழல் ரீதியாகவும், மகசூல் ரீதியாகவும் பயன் தருகிறது என்பது கண் கூடாக பார்த்து தெரிந்து கொண்டனர். மேலும், தங்களுடைய சந்தேகங்களையும் முன்னோடி விவசாயிகளிடம் கேட்டு தெளிவு பெற்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...