கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி நகராட்சியில் மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம்

முகாமில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் சேர்த்தல், இலவச மருத்துவ உதவி திட்டம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்து கடன் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விண்ணப்பங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன.


கோவை: பொள்ளாச்சி நகராட்சி 26, 31, 32 வார்டுக்கு உட்பட்ட பககுதியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம் நடைபெற்றது. கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வார்டு வாரியாக முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக பத்ரகாளியம்மன் கோவில் வீதியில் உள்ள ஜெயசூர்யா மண்டபத்தில் 26, 31, 32வார்டு பகுதிக்கான முகாம் நடைபெற்றது. இந்த முகாமை நகர மன்ற தலைவர் சியாமளா நவநீதகிருஷ்ணன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார். முகாமில் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டு திட்டத்தில் சேர்த்தல், இலவச மருத்துவ உதவி திட்டம் மற்றும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்து கடன் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு விண்ணப்பங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டது.

இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் திமுக நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன், நகர மன்ற உறுப்பினர் பெருமாள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...