புதிய மோட்டார் வாகனம் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பொள்ளாச்சியில் வாகன ஓட்டுனர் கண்டன ஆர்ப்பாட்டம்

இலகு ரக, கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள ஓட்டுநர்களுக்கு இயற்கை மரணம் ஏற்பட்டால் 3 லட்சம் ரூபாயும், விபத்தில் மரணம் ஏற்பட்டால் 5 லட்சம் ரூபாயும், தனிநபர் காப்பீடு மாநில அரசு வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஓட்டுநர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


கோவை: மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஹிட் & ரன் BNS என்ற வழக்கை பதிவு செய்து அந்த ஓட்டுநருக்கு 7 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் 10 ஆண்டுகள் சிறை தண்டனை என்ற புதிய மோட்டார் வாகன சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் அனைத்து வாகன ஓட்டுனர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



மாநிலத் தலைவர் காளிங்கராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இலகு ரக, கனரக வாகனம் ஓட்டுநர் உரிமம் வைத்துள்ள ஓட்டுநர்களுக்கு இயற்கை மரணம் ஏற்பட்டால் 3 லட்சம் ரூபாயும், விபத்தில் மரணம் ஏற்பட்டால் 5 லட்சம் ரூபாயும், தனிநபர் காப்பீடு மாநில அரசு வழங்க வேண்டும், பணியில் இருக்கும் ஓட்டுநர்களை தாக்கும் நபர் யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்வதோடு 5 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை வழங்க சட்டம் இயற்ற வேண்டும், வெளிமாநிலம் சென்று வரும் ஓட்டுநர்களுக்கு வழிப்பறி கொள்ளையர்களால் உயிர் சேதம் ஏற்பட்டாலோ விபத்து மூலம் உயிர் சேதம் ஏற்பட்டாலோ எந்த மாநிலத்தில் நடக்கிறதோ அம்மாநில அரசு ஓட்டுநரின் உடலை அவரது சொந்த ஊரில் ஒப்படைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டன.



மேலும் விபத்து ஏற்பட்டவுடன் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஓட்டுநர்களிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் அங்குள்ள ஓட்டுநர்களின் உயிருக்கு யார் உத்தரவாதம் அளிப்பது, காவல் நிலையத்திற்கு ஓட்டுனர்கள் செல்லும் போது இந்த சட்டத்தை பயன்படுத்தி சில காவல்துறையினர் ஓட்டுநர்களிடம் லட்சக்கணக்கில் கையூட்டு பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இதனால் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே இந்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால் ஓட்டுநர்கள் மாற்று தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும், தமிழக அரசு ஓட்டுநர்களுக்கு தனி நலவாரியம் ஏற்படுத்தித் தர வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...