பொள்ளாச்சியில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா நகர அதிமுக சார்பில் கொண்டாட்டம்

பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன், பொள்ளாச்சி நகர அதிமுக செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டு அதிமுக கட்சிக்கொடியை ஏற்றி வைத்து எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


கோவை: அதிமுக நிறுவனரும், முன்னாள் முதலமைச்சருமான எம்ஜிஆரின் 107வது பிறந்த நாள் விழாவைமுன்னிட்டு, அதிமுகவினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நகராட்சிக்குட்பட்ட 25 மற்றும் 33வது வார்டு பகுதியில் எம்ஜிஆர் பிறந்த நாள் விழா நகர அதிமுக சார்பில் கொண்டாடப்பட்டது. இதில் அதிமுக தேர்தல் பிரிவு செயலாளரும், பொள்ளாச்சி சட்டமன்ற உறுப்பினருமான பொள்ளாச்சி ஜெயராமன், பொள்ளாச்சி நகர அதிமுக செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் கலந்து கொண்டு அதிமுக கட்சிக்கொடியை ஏற்றி வைத்து எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.



மேலும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் நகராட்சி கவுன்சிலர் ஜேம்ஸ் ராஜா, அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் குருசாமி, நகர அதிமுக பொருளாளர் கனகராஜ் உள்ளிட்ட அதிமுகவினர் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...