சிவில் வழக்கில் தலையிட்டு பாதிக்கப்பட்டவரை குனியமுத்தூர் இணை ஆணையர் மிரட்டுவதாக பாதிக்கப்பட்டவர் புகார்

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது சட்டத்திற்கு புறம்பாக காவல்துறை உதவியோடு சண்முகம் மற்றும் அவரது குடும்பத்தை மிரட்டி வருகின்றனர். இதற்கு குனியமுத்தூர் காவல் நிலையம் அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக பாதிக்கப்பட்டவர் புகார் கூறினார்.


கோவை: கோவையில் சிவில் வழக்கில் மாநகர காவல்துறை இணை ஆணையர் ரகுபதி ராஜா தலையிட்டு பொய் வழக்கு போடுவதாக கூறி இருந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்கள், கோவை காவல் ஆணையரிடம் புகார் அளித்தனர்.

சண்முகம் என்பவர் கோவை மாவட்டம் சுண்டக்காமுத்தூர் பகுதியில் வசித்து வருகிறார். சண்முகம் மற்றும் அவரது மனைவிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதால் ஆனந்த என்பவரை அணுகி நிலத்தை வைத்து இரண்டு லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளனர். ஆனால், ஆனந்த், சண்முகத்திற்கு தெரியாமல் நிலத்தை வேறொரு நபருக்கு பத்திரத்தை மாற்றி சண்முகத்தை ஏமாற்றி நிலத்தை விற்பனை செய்துள்ளார்.

பின்னர் சிவானந்தம், சக்திவேல் மற்றும் கனகராஜ் சண்முகத்தை மிரட்டி நிலம் எனக்கு சொந்தம் என்று பிரச்சனை செய்துள்ளார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு, முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர் சண்முகம் கோவை மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தற்போது உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கிறது.

நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது சட்டத்திற்கு புறம்பாக காவல்துறை உதவியோடு சண்முகம் மற்றும் அவரது குடும்பத்தை மிரட்டி வருகின்றனர். இதற்கு குனியமுத்தூர் காவல் நிலையம் அதிகாரிகளும் உடந்தையாக இருப்பதாக பாதிக்கப்பட்டவர் கூறினார்.

குனியமுத்தூர் இணை ஆணையர் ரகுபதிராஜா சண்முகம் இடத்திற்கு சென்று அங்கு பணிபுரியும் வேலை ஆட்களை மிரட்டி உள்ளார். வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் போது காவல்துறை அதிகாரிகள் தலையிட்டு பாதிக்கப்பட்டவரை மிரட்டி வருகின்றனர். ஏற்கனவே கடந்த வாரம் சட்ட ஒழுங்கு ஏடிஜிபி அறிக்கை ஒன்று வெளியீட்டார். அதில், சிவில் வழக்குகளில் காவல்துறை தலையிடக்கூடாது என்று கூறியும், அதனை மீறி தலையிட்டு பாதிக்கப்பட்டவரை காவல்துறையினர் மிரட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...