காங்கேயம் அருகே சிவன்மலை சுப்பிரமணிய சாமி கோவிலில் தைப்பூச தேர் விழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 26ஆம் தேதி துவங்கி மலையை வலம் வந்து, 28 ஆம் தேதி தேர் நிலையை அடைகிறது. தேர்த் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை சிவன்மலை கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


திருப்பூர்: சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச தேர்த் திருவிழா கொடியேற்றம் வெகுவிமர்சையாக நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலை சுப்பிரமணியசாமி கோவில் தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு இன்று கொடியேற்றும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கொங்கு மண்டலத்தில் முருகப்பெருமான் குடிகொண்டிருக்கும் கோவில்களில் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். மேலும் நாட்டில் வேறு எந்த கோவிலுக்கும் இல்லாத ஒரு சிறப்பாக இங்குள்ள ஆண்டவன் உத்தரவு பெட்டி விளங்குகிறது.

சிவன்மலையில் உள்ள சுப்பிரமணியசாமி கோயிலின் தைப்பூச தேர்த் திருவிழா, கடந்த 17ம் தேதி மலை அடிவாரத்தில் உள்ள வீரகாளியம்மன் கோயிலில் தேர்த் திருவிழாவுடன் துவங்கியது. இதன் பின்னர், இன்று மலைக் கோயிலில் சிறப்பு வழிபாடும், மயில் வாகன அபிஷேகமும் நடைபெற்றது. இன்று மதியம் விநாயகர் வழிபாடும், தொடர்ந்து முருகன் கோயில் சன்னதி முன் உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது.



பின்னர் சாமி சப்பாரத்தில் மலையை வலம் வந்து மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளல் பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து தினசரி காலை 9 மணிக்கு காலசந்தி பூஜையும், திருக்கோவில் மற்றும் பல்வேறு சமூக மக்களின் சார்பில் மண்டபக்கட்டளையும் நடைபெறும்.

தேர்த் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 26ஆம் தேதி துவங்கி மலையை வலம் வந்து, 28 ஆம் தேதி தேர் நிலையை அடைகிறது. தேர்த் திருவிழாவுக்கான ஏற்பாடுகளை சிவன்மலை கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர். மேலும் மலை அடிவாரத்தில் தேர்த்திருவிழா கடைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...