கோவை சங்கமேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கோட்டை ஈஸ்வரனை வழிபட்டனர். அதனைத்தொடர்ந்து இன்று மாலை திருக்கல்யாணம் மற்றும் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது.


கோவை: கோவை கோட்டைமேட்டில் உள்ள அகிலாண்டேஸ்வரி உடனமர் சங்கமேஸ்வரர் கோயில் கும்பாபிஷேக விழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து சண்முக சுப்பிரமணியர் மற்றும் ராஜ கோபுர பரிவார மூர்த்திகளுக்கு திருக்கூட நன்னீராட்டு நடைபெற்றது.



பின்னர் கோவிலில் மகா தீபாராதனை மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு கோட்டை ஈஸ்வரனை வழிபட்டனர். அவரைத் தொடர்ந்து இன்று மாலை திருக்கல்யாணமும் மற்றும் சுவாமி திருவீதி உலா நடைபெற உள்ளது.

கொங்கு நாட்டிற்கு வந்த சோழ மன்னன் ஒருவரும், சமய முதலி என்ற குழுவினர்களும் காடு திருத்தி நாடு அமைத்து 36 ஆலயங்களை கட்டினர். அந்த 36 ஆலயங்களில் ஒன்று தான் ஸ்ரீ சங்கமேஸ்வரர் கோயில். பழமையான கோவில்களில் சங்கமேஸ்வரர் இருக்கும் கருவறையை மிகவும் பழமையானது. இந்த கருவறையின் மேல் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட விமானம் உள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...