தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது - கோவையில் இந்து முன்னணி தலைவர் கடேஸ்வரா சுப்பிரமணியன் பேட்டி

வெளிநாடுகளில் கூட ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் சிறப்பு வழிபாடு செய்ய கூடாது என்ற தமிழக அரசு கூறியுள்ளது கண்டனத்திற்குரியது என இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறியுள்ளார்.


கோவை: கோவை மாநகர் மாவட்டம் காந்திபுரம் நகரில் பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து 200-க்கும் மேற்பட்டோர் இந்து முன்னணியின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமையில் இணைந்தனர்.



அயோத்தி ராமர் கோவில் பான பிரதிஷ்டை முன்னிட்டு நாடு முழுவதும் பெரும் கொண்டாட்டங்கள் நடந்து வருகின்றன. 16-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் அரசு பொது விடுமுறை அளித்துள்ளது. அதேபோல தமிழகத்திலும் பொது விடுமுறை விட வேண்டும் என மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் கூறினார். நாளை அனைத்து இல்லங்களிலும் விளக்கேற்றி ஸ்ரீ ராம ஜெயம் மந்திரத்தை உச்சரிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். வெளிநாடுகளில் கூட ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை கொண்டாடுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டில் சிறப்பு வழிபாடு செய்ய கூடாது என்ற தமிழக அரசு கூறியுள்ளது. திமுக அரசு இந்துக்களுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது.

தமிழகத்தில் சட்ட ஒழுங்கு மோசமாக இருக்கிறது. தமிழ் நாட்டில் இந்துக்களுக்கு பாதுகாப்பு இல்லை. அதனை கண்டித்து தான் இந்துகள் பாதுகாப்பு மாநாடு வரும் 26-ம் தேதி புளியம்பட்டியில் நடைபெற இருக்கிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு சாய்பாபா காலனி காவல் நிலையத்தை சேர்ந்த காவலரை தாக்கி உள்ளனர். அந்தளவுக்கு சட்டம் ஒழுங்கு தமிழகத்தில் விளங்கி வருகிறது. தமிழக அரசு சிறுபான்மையினருக்கு சாதகமாக இருப்பதால் அவர்கள் மீது வழக்கு தொடுக்காமல் இந்துக்களை வாட்டி வதைக்கிறது.வருகின்ற தேர்தலில் நாத்திக அரசாங்கத்திற்கு இந்துகள் பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார். திமுக சமூகநீதியை வாய் கிழிய பேசுகிறது ஆனால் திமுக எம்எல்ஏ வீட்டில் பணிபுரியும் பட்டிலின பெண்ணை தாக்கிய குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.

திமுக கூட்டணியில் இருக்கும் கூட்டணி கட்சிகள் அந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடுமைக்கு ஒரு அறிக்கை கூட வெளியிடவில்லை எனவும், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். திமுக அரசு கோவிலை இடிப்பதற்கும், கோவிலில் வழிபாட்டை நிறுத்துவதற்கும் முயற்சிகளை எடுத்து வருகின்றனர். கருணாநிதிக்கு அன்னாதானம் செய்வதற்கு கோவில் நிதியை பயன்படுத்துகிறார்கள்.

திமுக அரசாங்கத்திற்கு பின்னாடி தி.க, நக்சலைட் போன்ற இயக்கங்கள் இயங்கி வருகிறது. அதற்கு முதலமைச்சர் பலி ஆயிட்டு இருக்கிறார். தமிழ்நாட்டில் விளையாட்டு ஊக்குபடுத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு நோக்கமில்லை. இந்த மாநாட்டை நடத்தி துணை முதல்வர் ஆவாதற்கு திட்டமிட்டுள்ளனர். மற்ற அமைப்பினர் பேரணி நடத்தினால் தடுத்து நிறுத்துகிறார்கள். ஆனால் மாநாட்டிற்காக திமுகவினர் அராஜகமாக பேரணியை நடத்துகிறார்கள். இந்துகள் கதாநாயகன் சூப்பர் ஸ்டாரான ராமருக்கு தமிழக அரசு சலுகைகள் வழங்க வேண்டும். அனைவருக்கும் ராமர் கோவில் செல்வதற்கு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...