கோவையில் 24 மணி நேரம் தொடர்ந்து ராமாயணம் இசைக்கும் நிகழ்ச்சி

பஞ்சாபி அசோசியேசன் வளாகத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் ராம பெருமான், சீதை மற்றும் லட்சுமணன், அனுமாருடன் இருக்கும் உருவப்படம் வைத்து அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.


கோவை: அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் விழா நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.



அதன் ஒரு பகுதியாக கோவையில் கோயம்புத்தூர் பஞ்சாபி கூட்டமைப்பு சார்பில் 24 மணி நேரம் தொடர்ந்து ராமாயணம் பாடும் நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

கோவை தடாகம் சாலை கே.என்.ஜி புதூர் பகுதியில் உள்ள பஞ்சாபி அசோசியேசன் வளாகத்தில் நடைபெற்று வரும் இந்த நிகழ்ச்சியில் ராம பெருமான், சீதை மற்றும் லட்சுமணன், அனுமாருடன் இருக்கும் உருவப்படம் வைத்து அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.



மேலும் ஆண்கள், பெண்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்று ராமயண புத்தகத்தை வைத்து ராமாயணம் பாடி வழிபாடு செய்யப்படுகிறது.



பெண்கள் ஒன்று கூடி ராமாயண பதிகம் பாடியும், தாண்டியா நடனம் ஆடியும் மகிழ்ந்தனர். இன்று பகல் 12 மணிக்கு துவங்கியுள்ள இந்த ராமாயணம் பாடும் நிகழ்ச்சியானது நாளை பகல் 12 மணி வரை தொடர்ந்து நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...