கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு வால்பாறையில் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு முகாம்

பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்ற முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு முகாமில் சுமார் 10,000 மேற்பட்ட பொதுமக்கள் புதிதாக மருத்துவ காப்பீடு பெற்றுக் கொண்டனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் 50 ஆயிரம் மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் முக்கிய வாழ்வாதாரமாக தேயிலை தோட்டம் தொழில் செய்து வாழ்ந்து வருகின்றனர்.



இவர்களுக்கு மருத்துவ வசதிகள் குறைவு, கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு முகாம் மற்றும் புதிய மகளிர் சுயஉதவி குழு மற்றும் சிறு குரு வியாபரிகளுக்கு வங்கி கடன் சமந்தமான முகாம் வால்பாறையில் 20ம் தேதி சனி மற்றும் 21ம் தேதி ஞாயிறு கிழமைகளில் 01, 02, 03, 04, 09, 11, 12, 16 ஆகிய வார்டுகளிலும், சோலையார் அணை அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளியில் வார்டு எண் 05, 06, 07, 08, 18. ஆகிய வார்டுகளிலும் 10, 13, 14, 15, 17, 19, 20, 21 ஆகிய வார்டுகளில் பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையில், மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன் தலைமையிலும் வால்பாறை நகராட்சி நிர்வாகத்தின் மூலம் நடைபெற்றது.



முகாமில் வால்பாறை பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் இருந்து எஸ்டேட் பகுதியில் இருந்தும் பொதுமக்கள் வந்து முகாம் காப்பீடு பதிவு செய்து பயன்பட்டனர். இதில் ஏற்கனவே முகாம் மருத்துவ காப்பீடு வைத்திருப்பவர்கள் புதிதாக நினைவு செய்து புதுப்பித்து பயன்பட்டனர். சுமார் 10,000 மேற்பட்ட பொதுமக்கள் முகாமில் புதிதாக மருத்துவ காப்பீடு பெற்றுக் கொண்டனர்.



இதில் பொள்ளாச்சி சார் ஆட்சியர், வால்பாறை நகராட்சி நகர மன்ற தலைவர் அழகு சுந்தரவல்லி, துணை தலைவர் செந்தில்குமார் மற்றும் திமுக நகரச் செயலாளர் சுதாகர், வார்டு கவுன்சிலர் ஜே.பி.ஆர். அன்பரசன், செல்வம் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...