வீடுகளில் தீபங்களை ஏற்றி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை கொண்டாடுவோம் - வானதி சீனிவாசன் வேண்டுகோள்

நாம் கார்த்திகை தீபத்தன்று நூற்றுக்கணக்கான தீபங்களை ஏற்றி கொண்டாடுவது போல இந்த தீபங்களை ஏற்றி நாம் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை கொண்டாடுவோம் என்று சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.


கோவை: கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் உள்ள ராம பக்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகம் ராமர் கோயில் கும்பாபிஷேக நிகழ்வை பார்ப்பதற்காக ஏற்பாடுகள், அன்னதானம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதை நேற்று முதல் தமிழக அரசு காவல்துறை வாயிலாக மிரட்ட ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்காக ராம பக்தர்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள். இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சி மகளிர்களுக்கு மட்டுமில்லாமல் தமிழகத்தில் உள்ள அனைத்து தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன்.

அதன்படி பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ராமர் கோயில் கும்பாபிஷேக நாளிலே அனைவரது வீட்டிலும் விளக்கேற்றி கொண்டாட சொல்லி இருக்கிறார். தமிழக அரசு, பக்தர்களின் உணர்வுகளை மதிக்காமல் இவ்வாறு மிரட்டுகின்ற பொழுது, நாம் அனைவரும் நமது ராம பக்தியை காட்டுவதை மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாட வேண்டும்.

அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் 5 விளக்குகளை ஏற்றச் சொல்லி இருக்கிறார் பிரதமர். நாம் கார்த்திகை தீபத்தன்று நூற்றுக்கணக்கான தீபங்களை ஏற்றி கொண்டாடுவது போல இந்த தீபங்களை ஏற்றி நாம் கொண்டாடுவோம் என்று கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...