மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வருமாறு கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் அழைப்பு

சித்தாபுதூர், வி.கே.கே.மேனன் சாலையில், கோவை மாநகர் மாவட்ட திமுக மாணவரணி சார்பில், "மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்" பொதுக்கூட்டம் வருகின்ற 25.01.2024 வியாழக்கிழமை மாலை 5.30 மணியளவில் நடைபெற‌ உள்ளது.


கோவை: கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் Ex.MLA., இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் வருகின்ற 25.01.2024, வியாழக்கிழமை, மாலை 5.30 மணியளவில், சித்தாபுதூர், வி.கே.கே.மேனன் சாலையில்,கோவை மாநகர் மாவட்ட திமுக மாணவரணி சார்பில், "மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள்" பொதுக்கூட்டம் நடைபெற‌ உள்ளது.

இதில் , தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாடு வீட்டுவசதித்துறை, நகர்ப்புற வளர்ச்சி, மதுவிலக்கு மற்றும்‌ ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி மற்றும் தலைமைக் கழகப் பேச்சாளர் த.ஆதித்தன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.

இந்நிகழ்ச்சியில், கோவை மாநகர் மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட நிர்வாகிகள், தலைமைக் கழக‌ நிர்வாகிகள், மேயர், தலைமைச் செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதிச் செயலாளர்கள், அனைத்து உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், வட்டக்கழகச் ‌செயலாளர்கள், பகுதிக்கழக நிர்வாகிகள், வட்டக்கழக நிர்வாகிகள், கழக செயல்வீரர்கள், BLA-2, பாக முகவர்கள், கழகத் தொண்டர்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...