மத்திய அரசின் புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு

BNS 106/HIT AND RUN சட்டத்தை மறு சீர்திருத்தம் செய்ய வேண்டி, தாய்நாடு அனைத்து ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தின் கோவை உறுப்பினர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.


கோவை: மத்திய அரசு அறிவித்துள்ள சாலையில் வாகன ஓட்டிகளை இடித்து செல்லும் வாகன ஓட்டிகளுக்கான புதிய தண்டனை சட்டமான BNS 106/HIT AND RUN சட்டத்தை மறு சீர்திருத்தம் செய்ய வேண்டி, தாய்நாடு அனைத்து ஓட்டுனர்கள் தொழிற்சங்கத்தின் கோவை உறுப்பினர்கள் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.



Hit and Run எனும் விபத்தை ஏற்படுத்தும் ஓட்டுநர்களுக்கு ரூ.10 லட்சம், 7 ஆண்டு சிறை தண்டனை என்ற அம்சம் இந்த சட்டத்தில் உள்ளதால் இதுகுறித்து லாரிகள், டிரக், மேலும் டாக்ஸி ஓட்டுனர்கள் கூட அதிருப்தியில் உள்ளனர். இந்த சட்டம் வாடகை வாகன ஓட்டுனர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் ஏற்றப்பட்டுள்ளதாகவும், ஓட்டுனர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர்களை கருத்தில் கொண்டு இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என அனைத்து ஓட்டுநர்களின் கோரிக்கையாக வலியுறுத்துவதாக அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...