கோவை மாநகரில் குடிநீா்க் கட்டணம் நிலுவை - 10 குடிநீா் இணைப்புகள் துண்டிப்பு

மேற்கு மண்டலம் 33-ஆவது வார்டில் ஒரு தனியார் வணிக வளாகம் சில ஆண்டுகளாக மாநகராட்சிக்கு குடிநீா்க் கட்டணம் செலுத்தவில்லை. குடிநீா்க் கட்டணம் செலுத்தாததால் அந்த வணிக வளாகத்துக்கு வழங்கப்பட்டிருந்த 2 குடிநீா்க் குழாய் இணைப்புகளும் சனிக்கிழமை துண்டிக்கப்பட்டன.


கோவை: கோவை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள 100 வார்டுகளில் 5 லட்சத்துக்கும் மேலான வீடுகள், தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்ளன. இவைகளுக்கு மாநகராட்சி சார்பில் குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஏராளமான நிறுவனங்கள் மாநராட்சிக்கு குடிநீா்க் கட்டணம் செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து, நிலுவைக் குடிநீா்க் கட்டணத்தை வசூலிக்க மாநகராட்சி ஆணையா் மா.சிவகுரு பிரபாகரன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்நிலையில், மேற்கு மண்டலம் 33-ஆவது வார்டில் உள்ள ஒரு தனியார் வணிக வளாகம் சில ஆண்டுகளாக மாநகராட்சிக்கு குடிநீா்க் கட்டணம் செலுத்தவில்லை. அதன் உரிமையாளரிடம் நிலுவைக் குடிநீா்க் கட்டணம் ரூ.12 லட்சத்து 40 ஆயிரத்தை செலுத்தும்படி மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், அவா் குடிநீா்க் கட்டணம் செலுத்தாததால் அந்த வணிக வளாகத்துக்கு வழங்கப்பட்டிருந்த 2 குடிநீா்க் குழாய் இணைப்புகளும் சனிக்கிழமை (ஜன.20) துண்டிக்கப்பட்டன.

இதேபோல, மத்திய மண்டலத்தில் குடிநீா்க் கட்டணம் செலுத்தாத 8 வீடுகளின் குடிநீா் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...