குனியமுத்தூர் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் - கண்காணிப்பு பணியில் வனத்துறையினர்

ஜே.ஜே.நகர், அபிராமி நகர் மற்றும் அதனை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளில் வனத்துறை குழுவினர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதியில் உள்ள புதர்கள், பாழடைந்த கட்டிடங்கள் போன்றவற்றில் சந்தேகப்படும் படியான விலங்கினங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.


கோவை: கோவை குனியமுத்தூர் ஜே.ஜே நகர் பகுதியில் சாலையில் சுற்றி திரிந்த நாய் மற்றும் பூனை உள்ளிட்டவை மர்மமான முறையில் காணாமல் போயுள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும், நாய், பூனை போன்றவற்றை சிறுத்தை தான் வேட்டையாடுவதாக தகவல் பரவியது.

பின் இது குறித்து அப்பகுதி மக்கள் மதுக்கரை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து வனத்துறையினர் இன்று (22.01.2024) ஜே.ஜே.நகர், அபிராமி நகர் மற்றும் அதனை சுற்றி இருக்கக்கூடிய பகுதிகளில் வனத்துறை குழுவினர் நேரடியாக ஆய்வு மேற்கொண்டனர். மேலும், அப்பகுதியில் உள்ள புதர்கள், பாழடைந்த கட்டிடங்கள் போன்றவற்றில் சந்தேகப்படும் படியான விலங்கினங்கள் ஏதேனும் இருக்கிறதா என்பது குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...