மருதமலையில் தைப்பூச விழாவை முன்னிட்டு சுப்பிரமணியசுவாமி கோவிலில் துணை கமிஷனர் ஆய்வு

தேர்திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார், வடக்கு ஆர்.டி.ஓ. கோவிந்தன், வடக்கு தாசில்தார் மணிவேல் ஆகியோர் நேற்று நேரில் ஆய்வு செய்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வடவள்ளி, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலில் கடந்த 19ம் தேதி தைப்பூச தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மேலும் தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக, வரும், 24ம் தேதி, திருக்கல்யாண உற்சவமும், 25ஆம் தேதி, திருத்தேர் வடம் பிடித்தலும் நடக்கிறது. இதனையடுத்து, மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவிலிலுக்கு, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால், மாவட்ட நிர்வாகம், கோவில் நிர்வாகம், மாநகர போலீசார் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், தேர்திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு, தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு வசதிகள் குறித்து, மாநகர போலீஸ் துணை கமிஷனர் சரவணகுமார், வடக்கு ஆர்.டி.ஓ. கோவிந்தன், வடக்கு தாசில்தார் மணிவேல் ஆகியோர் நேற்று (ஜன.21) நேரில் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்விற்கு பின், பக்தர்கள், மலை மேல் உள்ள கார் பார்க்கிங் பகுதியில் இருந்து கோவிலுக்கு மேலே செல்ல, பழைய படிக்கட்டு பாதையிலும், கோவிலில் இருந்து கீழே இறங்கும் பக்தர்கள், ராஜகோபுரத்தின் வழியாக கீழே இறங்கவும், பக்தர்கள் வரிசையில் நின்று பஸ் ஏற தேவையான வசதிகளையும் ஏற்படுத்த அறிவுறுத்தினர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...