ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு காங்கேயத்தில் பல்வேறு பகுதி கோவில்களில் அன்னதானம்

காங்கேயம் பெருமாள் கோவில் முன்புறம் ஜெய் ஸ்ரீராம் அமைப்பினர் சார்பில், உணவுகள் கொண்டுவரப்பட்டு ராமர் திருவுருவப் படத்திற்கும், உணவுக்கும் பூஜைகள் செய்து பின்னர் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் பல்வேறு கோவில்களில் அன்னதானம் காலை முதலே வழங்கப்பட்டது. இன்று அயோத்தியில் ராமர் கோவில் கும்பேசேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து இந்து அமைப்புக்கள், பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு திருக்கோவில் பக்தர்கள் சார்பில் காங்கேயம் பகுதிகளில் பல்வேறு இடங்களில் அன்னதானம் நடைபெற்றது.

காங்கேயம் பகுதியில் உள்ள பல்வேறு பகுதிகளில் இன்று கோவில்களில் அன்னதானம் காலை முதலே வழங்கப்பட்டது. இன்று அயோத்தி ராமர் கோவில் 500 ஆண்டுகளுக்கு பின்னர் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதை கொண்டாடும் விதமாகவும் பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு கோவில் அருகே அன்னதானம் வழங்கப்பட்டது.

காங்கேயம் பெருமாள் கோவில் முன்புறம் ஜெய் ஸ்ரீராம் அமைப்பினர் அன்னதானம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. பின்னர் உணவுகள் கொண்டுவரப்பட்டு ராமர் திருவுருவப் படத்திற்கும், உணவுக்கும் பூஜைகள் செய்து பின்னர் பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

சிறப்பு அழைப்பாளராக அதிமுக காங்கேயம் நகர செயலாளர் வெங்கு ஜி.மணிமாறன் கலந்துகொண்டு உணவுகளை பக்தர்களுக்கு வழங்கினார். திருப்பூர் தெற்கு மாவட்டத் தலைவர் மற்றும் காங்கயம் வடக்கு ஒன்றியத் தலைவர்களின் ஆலோசனையின்படி அயோத்தியில் நடைபெற்ற இராமபிரான் ஆலய பிரான பிரஸ்திஷ்டை சிறப்பாக நடைபெறவும் பாரததேச மக்கள் அனைவரின் நலனுக்காகவும் பிரசித்தி பெற்ற சிவன்மலை ஆஞ்சநேயர் சன்னதியில் சிறப்பு அபிஷேக ஆராதனையும் தொடர்ந்து பொது மக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.

இந்த நிகழ்வில் விவசாய அணி பொறுப்பாளர் அருணாச்சலம், ஓபிசி அணி பொறுப்பாளர் கதர் கோவிந்தராஜ், தரவு மேலாண்மை பொறுப்பாளர் சஞ்சீவ் குமார், வர்த்தக அணி வடக்கு ஒன்றிய தலைவர் கனகராஜ், மாவட்ட வர்த்தக பிரிவு செயலாளர் கே.சண்முகம், தகவல் தொடர்பு மற்றும் சமூக ஊடகப் பிரிவு காங்கேயம் நகர தலைவர் லோகேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...