அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் - கோவையில் ராமர் வேடத்துடன் பெண்கள் விளக்கு ஏந்தி ஊர்வலம்

கதிர் நாயக்கன்பாளையம் அண்ணா நகர் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளில் ராமரை வரவேற்கும் விதமாக வண்ண கோலமிட்டு தீப விளக்கு ஏற்றி பொதுமக்கள் சிறப்பு வழிபாடு நடத்தினர்.


கோவை: அயோத்தியில் நடைபெற்ற ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை தொடர்ந்து கோவையில் பெண்கள் வீடுகளில் தீப விளக்கு ஏற்றி வைத்து பின்னர் விளக்குகளுடன் ஊர்வலமாக சென்று வழிபட்டனர்.



நாடு முழுவதும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை எதிர்பார்த்த நிலையில் பிரதமர் தலைமையில் வெகு விமர்சையாக கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இதனையடுத்து தமிழகம் முழுவதும் உள்ள ராமர் கோவில்களில் சிறப்பு பூஜைகள், பஜனைகள் நடைபெற்றது.



இதனை தொடர்ந்து கோவை கதிர் நாயக்கன்பாளையம் அண்ணா நகர் பகுதியில் உள்ள 50க்கும் மேற்பட்ட வீடுகளில் ராமரை வரவேற்கும் விதமாக வண்ண கோலமிட்டு தீப விளக்கு ஏற்றி வழிபட்டனர்.



தொடர்ந்து ராமர் வேடமிட்ட குழந்தைகளுடன், பெண்கள் கையில் தீப விளக்குகளை ஏந்தியபடி ஊர்வலமாக அப்பகுதியில் உள்ள ராமர் கோவில் வரை சென்று சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...