பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆர்ப்பாட்டம்

திருவள்ளுவர் திடலில் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் பகவதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.


கோவை: அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இரண்டாம் கட்ட இந்திய ஒற்றுமை நீதி பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் நேற்று அசாம் மாநிலத்தில் ஒற்றுமை நீதி பயணத்தை மேற்கொண்டு போது ராகுல் காந்தி வந்த பேருந்தை வழிமறித்து பாஜகவினர் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இச்சம்பவத்தை கண்டிக்கும் வகையில் பொள்ளாச்சியில் கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் திருவள்ளுவர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. கோவை தெற்கு மாவட்ட தலைவர் பகவதி தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜகவினரை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பொள்ளாச்சி நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் செந்தில் உள்ளிட்ட காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...