கிரீன் பீல்டு பகுதியில் யானைகள் கூட்டம் உலா - தகர செட்டுகளை உடைத்ததால் மக்கள் அச்சம்

துடியலூர் அருகே உள்ள கதிர்நாயக்கன்பாளையம் லட்சுமி நகர் பேஸ்3, டி.கே.ஜி.நகர், ரேணுகா புரம், கிரீன் பீல்டு உள்ளிட்ட நகர் பகுதிகளில் இரவு நேரங்களில் உணவு தேடி காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து அங்குள்ள வாழைமரம், தென்னை மரம், செடி, கொடிகளை தின்றுவிட்டுச் செல்கின்றன.


கோவை: கோவை மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய ஆனைகட்டி மலைப் பகுதிகளில் சுமார் 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இவைகள் உணவு தேடி அவ்வப்போது மலை அடிவாரப் பகுதிகளான, மாங்கரை, தடாகம், வீரபாண்டி, பன்னிமடை, கதிர்நாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள குடியிருப்புகளுக்குள் வருகின்றன. மேலும் அருகில் உள்ள தோட்டங்களில் புகுந்து தென்னை மற்றும் வாழை மரங்களை சேதப்படுத்தி வருகின்றன.

இதன் காரணமாக இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியில் நடமாட முடியாமல் அச்சத்தில் உள்ளனர்.



இந்த நிலையில் கடந்த சில வாரங்களாக துடியலூர் அருகே உள்ள கதிர்நாயக்கன்பாளையம் லட்சுமி நகர் பேஸ் 3, டி.கே.ஜி.நகர், ரேணுகா புரம், கிரீன் பீல்டு உள்ளிட்ட நகர் பகுதிகளில் இரவு நேரங்களில் உணவு தேடி காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து அங்குள்ள வாழைமரம், தென்னை மரம், செடி, கொடிகளை தின்றுவிட்டுச் செல்கின்றன.

இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாக கிரீன் பீல்டு பகுதியில் யானை கூட்டம் உலா வந்ருகின்றன. இதில் நேற்று இரவு வந்த 3 யானைகள் கொண்ட காட்டு யானைக் கூட்டம் அங்கு கட்டடப் பணியாளர்கள் தங்கியிருந்த தகர செட்டுகளை உடைத்தெந்தது. அப்போது அருகில் இருந்தவர்கள் சத்தம் போடவே அதில் குழந்தைகளுடன் தங்கியிருந்தவர்கள் உயிருக்கு பயந்து தப்பி ஓடி உயிர் தப்பினர்.

இதையடுத்து பெரியநாயக்கன்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டும் பணியில் ஈடுபட்டனர். காட்டு யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் வராமல் தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...