அமராவதி அணை பூங்காவில் சுற்றுலா வளர்ச்சி திட்டம் மேற்கொள்ள ஆய்வு

அமராவதி அணை பூங்காவில் சுற்றுலா வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்தகுமார் அவர்கள் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, பூங்கா மேம்பாட்டிற்கு நீர்வளத்துறை மூலம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றி நீர்வளத்துறை உதவி பொறியாளர் அரவிந்திடம் மாவட்ட சுற்றுலா அலுவலர் கேட்டறிந்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமராவதி அணை உள்ளது. இந்த அணைக்கு முன்பு பூங்கா, ராக் கார்டன் அணையிலிருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் தொலைவில் முதலைப்பண்ணை உள்ளது.

அமராவதி சுற்றுலா தளத்திற்கு வருடத்திற்கு சுமார் ஒரு லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இதன் மூலம் ஆண்டிற்கு 10 லட்சம் ரூபாய் அரசிற்கு வருவாய் கிடைக்கிறது. ஆனால் அமராவதி அணை பூங்காவில் சுற்றுலா பயணிகளின் வருகைக்கு ஏற்ப அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் பல ஆண்டுகளாக இல்லாமல் இருந்து வருகிறது.



எனவே அமராவதி அணை பூங்காவில் சுற்றுலா வளர்ச்சி பணிகள் மேற்கொள்வதற்கு மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்தகுமார் அவர்கள் தலைமையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது அமராவதி அணை பூங்கா மேம்பாட்டிற்கு இதுவரையில் நீர்வளத்துறை மூலம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பற்றி நீர்வளத்துறை உதவி பொறியாளர் அரவிந்த் அவர்களிடம் மாவட்ட சுற்றுலா அலுவலர் அவர்கள் கலந்து ஆலோசித்த போது நீர்வளத்துறை உதவி பொறியாளர் கூறியதாவது,

நீர்வளத் துறையில் அமராவதி அணை பூங்காவை பராமரிக்க போதுமான பணியாளர்கள் இல்லை என்றும், நீர்வளத் துறை மூலம் அமராவதி அணை பூங்காவை மேம்படுத்த கருத்துரு அரசிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஆய்வின் போது மாவட்ட சுற்றுலா அலுவலர் அவர்களிடம் ஆண்டிய கவுண்டனூர் ஊராட்சி தலைவர் மோகனவள்ளி ராஜசேகரன் அவர்கள் கூறியதாவது, பஞ்சாயத்து மூலம் சுற்றுலா பயணிகளுக்கு சிறிய அளவிலான அடிப்படை வசதிகள் மேற்கொள்ள தயாராக உள்ளோம். ஆனால் நீர்வளத் துறை அதிகாரிகள் தடையின்மைச் சான்றிதழ் அளிக்க தயாராக இல்லை. தற்போது சுற்றுலா பயணிகளுக்கு உடனடியாக கழிவறை வசதியாவது ஏற்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். பஞ்சாயத்தில் இதற்காக பல தீர்மானங்களை இயற்றியுள்ளோம் என்றும் தெரிவித்தார். ஆண்டிய கவுண்டனூர் ஊராட்சி துணைத் தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

சமூக ஆர்வலர் மானுப்பட்டி அரவிந்த் அவர்கள் ஆய்வின் போது மாவட்ட சுற்றுலா அலுவலர் அவர்களிடம் கூறியதாவது, திருப்பூர் மாவட்டத்தில் முதன்மை சுற்றுலாத்தலமாக உள்ள அமராவதி அணையில் அடிப்படை வசதிகள் இன்றி சுற்றுலாப் பயணிகள் மிகவும் அவதியுற்று வருகின்றனர். எனவே குறைந்தபட்சம் குடிநீர் மற்றும் கழிவறை வசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறினார்.

கல்லாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துலட்சுமி பழனிச்சாமி அவர்கள் கூறியதாவது, அமராவதி சுற்றுலாத்தலம் மேம்படுத்தப்பட்டால் இப்பகுதி உள்ளூர் மக்களின் வாழ்வாதாரம் மேம்படும். அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் கிடைக்கும். எனவே சுற்றுலா வளர்ச்சிப் பணிகளை ஏற்படுத்தித் தருமாறு மாவட்ட சுற்றுலா அலுவலர் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

ஆய்வின் போது திருப்பூர் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு குழு சங்க தலைவர் குளோபல் பூபதி, சுற்றுலா ஆர்வலர் நவீன் குமார் உடன் இருந்தனர். ஆய்வை முடித்த பிறகு மாவட்ட சுற்றுலா அலுவலர் அரவிந்த் குமார் அவர்கள் நிருபர்களிடம் தெரிவித்ததாவது,

திருப்பூர் மாவட்டத்தில் முதன்மை சுற்றுலாத்தலமாக உள்ள அமராவதி அணை பூங்காவை சுற்றுலா துறை மூலம் மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். நீர்வளத்துறை மூலம் 5 கோடி மதிப்பீட்டு அளவில் சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள கருத்துரு பெறப்பட்டுள்ளது. கருத்துருவில் குடிநீர் வசதி, கழிவறை வசதி, சிறுவர் பூங்கா, கம்பி வேலி போடுதல், குப்பைத்தொட்டி, வழிகாட்டு பலகைகள், நீரூற்றுகள், மின்விளக்குகள், தோட்டம் சீரமைத்தல், அழகிய சுவர் ஓவியங்கள், புகைப்பட கண்காட்சிகள், நடைபாதை, சிறுவர் பூங்கா, விளையாட்டு உபகரங்கள் போன்ற பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.

அரசிற்கு இந்த கருத்துரு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த கருத்துரு அரசால் ஏற்கப்பட்டு சுற்றுலா வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள அனுமதி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...