கோவை மாவட்ட ஆட்சியரிடம் கேபிள் டிவி விநியோகஸ்தர்கள் சங்கத்தினர் மனு

நல வாரியம் அமைத்துக் கொடுத்த அரசுக்கு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் குடும்பத்தினர் நன்றி தெரிவிக்கும் விதமாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அவர்களிடம் சங்க நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்தனர்.


கோவை: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி டிஜிட்டல் சிக்னல் விநியோகஸ்தர்கள் சங்க தலைவரும், 98வது வார்டு திமுக கவுன்சிலருமான இரா.உதயகுமார் தலைமையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அப்போது அவர் நிருபர்களிடம் கூறும்போது.

கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை, திருமண உதவித்தொகை, மகப்பேறு உதவி தொகை, விபத்து காப்பீடு அடங்கிய நல வாரியம் அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 20 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தோம். இதனை தற்போது திமுக அரசு நிறைவேற்றி உள்ளது.

எனவே நல வாரியம் அமைத்துக் கொடுத்த அரசுக்கு கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மற்றும் குடும்பத்தினர் நன்றி தெரிவிக்கும் விதமாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அவர்களிடம் மனு அளித்து தமிழக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

உடன் விநியோகஸ்தர்கள் சங்க நிர்வாகிகள் ஆர்.எஸ்.புரம் கே.ஆர் குமார், அருள்குமார், பாலாஜி, பொள்ளாச்சி பாரூக், சூலூர் செபஸ்டியன், ஆப்ரேட்டர்கள் விவேக், பார்த்தசாரதி, தென்னம்பாளையம் வெங்கடாசலம், அரசூர் பொன்னுசாமி, தொண்டாமுத்தூர் சீனிவாசன், வேடப்பட்டி துரைசிங் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...