பொள்ளாச்சியில் மரக்கன்றுகள் வழங்கி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்த நாள் கொண்டாட்டம்

பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில் புதிய பேருந்து நிலையம் முன்பு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அவரின் உருவப்படத்திற்கு பொள்ளாச்சி நகர மன்ற உறுப்பினர் சியாமளா நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.


கோவை: சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் 127 வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில் புதிய பேருந்து நிலையம் முன்பு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

மலர்களால் அலங்கரிக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் திரு உருவப்படத்திற்கு பொள்ளாச்சி நகர மன்ற உறுப்பினர் சியாமளா நவநீதகிருஷ்ணன், பொள்ளாச்சி நகர அதிமுக செயலாளர் கிருஷ்ணகுமார், எம்ஜிஎம் கல்லூரியின் முதல்வர் முத்துக்குமரன் உள்ளிட்ட திமுக, அதிமுக, மதிமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செய்தனர். என்.ஜி.எம் கல்லூரி வரலாற்று துறை மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் பொதுமக்களுக்கும் மரக்கன்றுகளும், இனிப்புகளும் வழங்கப்பட்டது.



தொடர்ந்து பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்பட்டது, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவையின் தலைவர் வெள்ளை நட்ராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் செயலாளர் மணிகண்டன், துணை செயலாளர் அமுதன், பொருளாளர் சுபீர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...